பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆந்தர்யாமித்துவ அநுபவம் 22} ஆழ்வார் பேசுகின்றார் : :வேள்விக்காக நெய். வைத்திருக்கின்ற குடத்தை எறும்புகள் முற்றுகையிட்டுக் கொண்டிருப்பதுபோல, என்னை வசப்படுத்தி என் உடலையே இருப்பிடமாகக் கொண்டு நிலைத்து வாழும் நோய்களே! இனி உங்களுக்கு இங்கு இடம் இல்லை. எம்பெருமான் தனது அரவத்து அமளியோடும் பள்ளிக் கொண்டிருக்கின்ற இடமாயிற்று என் உடல். இந்த எம்பெருமானுடைய பட்டினமாகிய இவ்வான்மா பழைய நிலைமையை உடையதன்று; இப்போது அவனால் காக்கப் பெறுகின்றது. நீங்கள் பிழைக்க வேண்டுமானால் என்னை விட்டு வேறிடத்திற்குப் போய்விடுங்கள்’ (1). பாம்பனை யோடு வந்து புகுந்து கிடந்தார்' என்பதனால் நிரந்தரமாக எழுந்தருளினமை தெளிவாகும். வேலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த நோய்களே: உங்களுக்குக் கூட ஒரு வல்வினை வந்துள்ளது. இங்கு சிங்கப்பிரான் எழுந்தருளியிருப்பதை வந்து நோக்குங்கள். உறைப்பான காவல் பெற்ற என்னிடம் இனி நீங்கள் தங்க முடியாது. அவமானங்களுக்கு ஆளாகாதபடி பிழைத்துப் போய்விடுங்கள். இனி இங்குத் தலை காட்டாதீர்கள் (4), *நெடுநாட்களாகத் தங்கி யி ரு ந் து அடியேனை வருந்தச் செய்கின்ற நோய்களே, உங்கட்கு ஒரு வார்த்தை: நீங்கள் இப்போது குடியிருக்கும் எனது உடல் கண்ண பிரான் எழுந்தருளுகைக்கு இடமான திருக்கோயிலாயிற்று. முன்னைய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் வேறு பாடு காணுங்கள். சம்சார சாகரத்தில் ஆழங்கால் படச் செய்த கொடிய வினைகளே!' என்று அந்த நோய்களுக்குக் காரணமாகிய பாபங்களை நோக்கி, உங்கட்கு உறுதியாக ஒன்று சொல்லுகின்றேன். இனி உங்கட்கு இங்கு ஒருவித பற்றும் இல்லை. கண்ணன் காவலில் என்னை நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது (6). - இங்ங்னம் நோய்களையும் வல்வினைகளையும் நோக்கிப், பேசின. ஆழ்வார் இந்திரியங்களை விளித்துப் பேசுகின்றார்: