பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.222 விட்டு சித்தன் விரித்த தமிழ் மாணிக் குறளுரு வாய மாயனை என்மனத் துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக்கொண் டேன்பிறி தின்றி மாணிக்கப் பண்டாரம் கண்டீர்; வலிவன் குறும்பர்கள் உள்ளீர்! பாணிக்க வேண்டா; நடமின், பண்டன்று பட்டினம் காப்பே (5). (மாணி.பிரமச்சாரி, உரு-வடிவு: மாயன்.எம்பெரு மான்; பேணி.ஆசைப்பட்டு; மனம்-நெஞ்சம்; புகுத புகுந்திருக்கும்படி, பிறிது - வேற்றுமை; குறும்பர்.இந்திரியங்கள்; பாணிக்க.தாமதிக்க) என்பது பாசுரம். இதில், வாமனனாய் அவதரித்தவனும், மாணிக்க நிதி போன்ற இனியனுமான எம்பெருமானை இன்று என் இதயகமலத்தில் நிலைநிறுத்திக் கொண்டேன். ஆகவே, பொல்லாத இந்திரியங்களே! இனி நீங்கள் இங்கு நசை வைக்கவேண்டியதில்லை; தாமதிக்காமல் வெளி யேறுங்கள்' என்கின்றார். இந்திரியங்கள் அசேதநமா யினும் கொடுமை புரிவதில் சேதநரிலும் விஞ்சி இருத்தலால் குறும்பர்கள் உள்ளீர் என்று உயர்திணையாகக் கூறினர். உள்நிலாவிய ஐவர்" (திருவாய், 7.1:1) என்று நம்மாழ் வாரும், கோ ஆய் ஐவர்" (பெரி. திரு. 7.7:9) என்று திருமங்கை மன்னனும் இந்திரியங்களை மரியாதைப் பன்மையுடன் விளித்தமை ஈண்டு நினைக்கத்தக்கது. எம்பெருமானை மாணிக்கப் பண்டாரம்" என்றது-அது போல பெறுதந்கரியவன் என்பதை விளக்குகைக்காக. இனி, பொதுநிலையில் பெற்ற அந்தர்யாமித்வ அநுபவத்தைக் காண்போம். துப்புடையாரை (5.2) என்ற திருமொழியில் எல்லை யில் வாசல் குருகச் சென்றால் எற்றி தமன்தமர் பற்றும் போது, நில்லுமின் என்னும் உபாயம் இல்லை: (3) என்ற