பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 விட்டு சித்தன் விரித்த தமிழ் உள்ளஞ் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்க ளாய்கண்ண நீர்கள் துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன்: - சொல்லாய் யான்உன்னைத் தத்துறு மாறே. (7): |வெள்ளை வெள்ளத்தின் மேல்.பால் மயமான பெருக்கில்; பாம்பு . அனந்தாழ்வன்; கள்ள நித்திரை.யோக நித்திரை; எதிர் விம்மி.மாறாகக் கலாங்கி; உரோம கூபங்கள் - மயிர்க்குழிகள்; துள்ளம்-துளிதுளியாக; அணை-படுக்கை; துயில். உறக்கம்; தத்துறும் ஆறு-கிட்டும் வழி1 என்பது பாசுரம். 'திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு அறிதுயில் கொள்ளும் நிலையை நேரில் காணலாம் என்ற ஆவலடியாக நெஞ்சு அழியப் பெற்று, சிறந்த பேரன்பின் காரணமாக வாய் திறந்து பேச வொண்ணாதபடி ஏங்கி உடம்பெல்லாம் மயிர்க் கூச்செறி யும்படி நமது எண்ணம் தலைக்கட்டப் பெறவில்லையே. என்ற மனச்சோர் வால் கண்ணிர் துளித்துளியாக சோரப் பெறுகையால், இதுவே சிந்தையாய் படுக்கையில் சாய்ந், தால் கண்ணுறங்கப் பெறாத அடியேன் உன்னை எவ்வாறு கிட்டுவேன்? அந்த வழியை அருளிச் செய்வாய் . என்கின்றார். பாலாழி கிேடக்கும் பண்பேயாய் கேட்டேயும் காலாலும் நெஞ்சுழலும் கண்சுழலும் --- -(பெரி. திருவந். 34). என்றாற்போல எம்பெருமானை நினைத்தவண்ணம் இருப் பதால் இஃது அந்தர்யாமித்துவ அநுபவமாகின்றது.

  • உலகங்கட்குக் காரணமானவனே! உன்னையே

தியானிப்பவர்களின் துன்பங்களைப் போக்குபவனே! மது என்ற அசுரனை நிரசித்தவனே! கஜேந்திரனுடைய துயர்