பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தர்யாமித்துவ அநுபவம் 225 தீர்த்தவனே! குன்றம் ஏந்தி குளிர் மழை தடுத்து ஆயர் கட்கும் ஆநிரைகட்கும் அபயம் அளித்தவனே! குவலயா பீடத்தை முடித்த பிரானே! துதிக்க முடியாத அளவற்ற புகழுடையவனே! எமக்குத் தலைவனே! அடியேன் நின்னை நாடோறும் அநுசந்திக்கையாகின்ற நன்மையை அருள வேண்டும்" (8) என்பதில் பலநிலை எம்பெருமான்கள் இவர்தம் சிந்தையில் அந்தர்யாமியாக எழுந்தருளி யிருப்பதைக் காண முடிகின்றது.

இரட்சகன் என்று நம்பத் தகுந்தவனே! வாயார நின்புகழ் பாட வல்லவர்கட்கு இரட்சகனே! நரசிம்மனாக அவதரித்தவனே! நித்திய சூரிகட்குத் தலைவனே! கால தத்துவத்தை ஆள்பவனே! திருவாழியை ஏந்திக் கொண்டு கஜேந்திரனை முதலை வாயினின்று விடுவித்தவனே! பாற்கடலைக் கிடைந்து தேவர்கட்கு அமுதளித்தவனே! எம்பெருமானே! அடியேனை ஆட்கொண்ட தேன்போல் இனியவனே! ஏழையேன் இடரைக் களைந்தருள் வேண்டும். (9) என்பதிலும் அந்தர்யாமித்துவ அதுபவம் பிச்சேறி நிற்பதைக் கண்டு மகிழலாம். ஏனைய திருமொழி களைவிட இத் திருமொழியில் எம்பெருமானுடைய திருந்ாமங்கள் சிந்ப்பாக அருளிச் செய்யப் பெற்றிருப் ட தன்ால் சகஸ்ரநாம அருச்சனைக்குச் சமமாகப் பிரபத்தி பண்ணுதலாகக் கொள்வது ஏற்கும், இங்ஙனம் விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கண்டு மகிழ்கின்றோம்.