பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு *227 வைணவர்களிடையே நிலவும் ஐதிகம் ஒன்று உண்டு. தண்டகாரண்ய முனிவர்கள் இராமபிரானது பேரழகில் ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆய மங்கையர்களாகிக் கண்ணனைக் கூடினர் என்பதுதான் அந்த ஐதிகம். ஆழ்வார்கள் அப்படியின்றி அப்பொழுதே பெண்மை நிலையை அடைந்து எம்பெருமானாகிய புருடோத்தமனை அநுபவிக்கக் காதலிக்கின்றனர். ஆண், பெண் நிலையை அடைதல் கூடுமோ எனில்: கூடும். கூறுவேன்: கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!! (காண்பரேல்.காண்பார்களாயின்; பெண்மையை. பெண் தன்மையை, அவாவும்.விரும்பும்). என்பது விசுவாமித்திரரின் கூற்று. தாடகைவதம் தொடங்கு வதற்கு முன் இராமனது தோளின் வலிமையை உற்று நோக்குகின்றான், அவனது தோளின் அழகு அவரது கண்ணை வசீகரிக்கின்றது. அதன் சிறப்பு நோக்கி, ஆடவரும் மனத்தால் மகளிர் தன்மையை அடைந்து அத் தோளினால் தழுவப் பெறல் வேண்டும் என்று காதல் கொள்ளுமாறு உள்ளவனே!" என்கின்றார். ஈண்டு முற்றத்துறந்த முனிவராகிய விசுவாமித்திரரும் இராமன் அழகில் துவக்குண்டு ஈடுபட்டதைக் காட்டியவாறு. திருவரங்கப் பெருமானைக் கிட்ட வேண்டும்படியான ஆசை உண்டாகின்றது திவ்விய கவிக்கு. ஆற்றாமை மீதுர்ந்து தளர்கின்றார்; அத்தளர்ச்சியாலே தாமான தன்மை அழிந்து ஆண், பெண் ஆகும் படியான நின்லமை தோன்றி ஒரு பிராட்டி நிலையை அடைகின்றார். பேசு கின்றார்: - - |v < بہ سیاہےمنیجمہ ----چ 1. பாலகாண். தாடகைவதை.41.