பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 விட்டு சித்தன் விரித்த தமிழ் வாராக வாமனனே! அரங்கா! வட்ட நேமிவல் வாராக வாவுன் வடிவு கண்டான் மன்மதனுமட வாராக ஆதரம் செய்வன் (வாராக - வராக அவதாரம் செய்தவன்; நேமி . சக்க ராயுதம்; ராகவர் . ரகுகுல திலகனே; வடிவு . திருமேனி அழகு) என்பது பாசுரம். அழகிற் சிறந்த ஆண் பாலான மன்மதனும் புருடோத்தமனான நின் தி ரு ேம னி அழகினைக் கண்டு தான் பெண் உருக்கொண்டு நின் அழகின் நலனை அநுபவிக்க எண்ணுவானாயின், (பெண் பாலான என் போன்ற மடமங்கையர்க்குப் பிழைக்கும் வழி என்னே) என்பது இதன் கருத்து. இன்னும்,

  • கண்ண்னுக்கே ஆம்.அதுகாமம்: அறம்பொருள் வீடுஇதற்(கு)

ன்ன்று உரைத்தான் வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே (கண்ணன் - எம்பெருமான்; ஆம் அது உண்டாகும் அது: அறம் பொருள் வீடு . தர்ம அர்த்த மோட்சங்கள்; இதற்கு என்று . இந்தக் காம புருஷார்த்தத்திற்கு சேஷ பூதங்கள் என்று: வாமனன் சீலன் . வாமன அவதாரம் செய்த 2. அஷ், பிரபந்: திருவரங்கத் தந்தாதி - 60. 3. மந்மதன் வடமொழிப் பெயர்; (ஆசை நோயால்). மனத்தைக் கலக்குபவனென்று பொருள்படும். 4. இராமா. நூற். - 40.