பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 . விட்டு சித்தன் விரித்த தமிழ், இங்ங்ணம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்கள் தோழி, தாய், மகள் என்ற மூவருள் ஒருவர் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுக நிகழ்த்துவர். இந்த மூன்று நிவைகட்குத் தத்துவமும் உண்டு. . . சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி, தாயார், மகள் என்று பேர் - (பிரஜ்ஞாவஸ்தை . மூன்று காலங்களையும் அறி யும் அறிவின் நிலை; . . . . > ・ ・ - ヘ என்பது ஆசாரிய ஹிருதய பூரீ ஸ்குக்தி. இதன் காரணமாகப் பாசுரங்களும் தோழி சொல்வதுபோல வடிவெடுத்துத் தோழி பாசுரம் என்றும், தாய் சொல்வதுபோல் அமைந்து தாய்ப் பாசுரம் என்றும், மகள் பேசுவதுபோல் உருக் கொண்டு மகள் பாசுரம் என்றும் வழங்கப் பெறும். இங்ங்ணம் மூன்று வகையாகக் கூற்றுகள் நிகழ்ந்து பாசுரங்கள் வெளி வந்தாலும் பாசுரங்கள் பேசுபவர்கள் ஆழ்வார்களேயாவர். இஃது அந்தந்தப் பதிகங்களின் பல சுருதிப் பாசுரங் களால் தெளிவாகும். ஓர் ஆறானது பல வாய்க்கால் களாகப் பெருகினாலும் அவற்றுக்கு முக்கியமான பெயர் ஒன்றேயாக இருக்கும் என்பதை அறிந்தால், ஆழ்வார்களின் சொல் மாலைகள் மூன்று நிலைமைகளாக வழிந்து புறப் பட்டாலும், அவை ஆழ்வார்களின் பாசுரங்களாகவே தலைக்கட்டி நிற்கும் என்பது தெளிவாகும், இங்ங்ணம் மூன்று நிலைகளிலும் திருமொழிகள் நடை பெறுவதற்கு உள்ளுறை (ஸ்வாபதேசார்த்தம்) கண்டவர்கள் வைணவப் பெருமக்கள். தோழி : தோழியாகப் பேசுவதற்குக் கருத்து - தலைமகனையும் தலைமகளையும் இணக்கிச் சேர்ப்பவள் 6. ஆசாரி, ஹிகு - 133.