பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு - 23 F. தோழி. திருமந்திரத்தில் (ஒம் + நமோ + தாராயணாய} ஒம் என்ற பிரணவத்தினால் எம்பெருமானோடு இந்த ஆன்மாவுக்குச் சொல்லப்பெற்ற அநந்யார்ஹ சேஷத்துவம் (மற்றவருக்கில்லாமல் எம்பெருமானுக்கே உரியதாயிருக்கும் அடிமைத் தன்மை) முதலிய சம்பந்தங்களை உணருகையே அவ்வெம்பெருமானோடு இவ்வான்மா சேருகைக்கு ஏது வாகையாலே அச்சம்பந்த ஞானமாகின்ற பி ர ஜ் ஞாவஸ்தையே தோழி என்பது. இங்ங்ணம் ஆன்மாக்கள் யாவும் சீமந் நாராயணனுக்கே அடிமை என்ற உணர்வுடன் கூடிய மனநிலை தோழி கூற்றாக வெளியிடப் பெறுகின்றது என்பது கருத்து. தாய் : பெண் பிள்ளையைப் பெற்று வளர்ப்பவள் தாய். அப்பெண் தக்க வயதை அடைந்ததும் பேராண் மைக்கு இருப்பிடமாகவுள்ள தலைவனிடம் கழிபெருங் காதலையுடையவளாகின்றாள். அவன் இ ரு க் கு ம் இடத்தைப் போய்ச் சேரவேண்டும் என்று பதறுகின்றாள். ஆனால் அவளது பதற்றத்தைத் தடுத்து நிறுத்துகின்றாள் தாய். தலைவனே தலைவி இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்பது நடைபெற வேண்டிய ஒழுங்குமுறை என்றும், அங்ஙனமின்றித் தலைவியே தலைவனிருக்கும் இடத்திற்குப் புறப்படுவது குல மரியாதைக்குச் சிறிதும் பொருந்துவதன்று என்றும் நினைப்பவள் தாய். திரு மந்திரத்தில் நம: பதத்தில் கூறப்பெற்ற உபாயமாகிய அறிவு நிலையைக் (பிரஜ்ஞாவஸ்தையை) குறிப்பவள் தாய்தாய் பாவனையில் பேசுகின்ற பாசுரங்கள் ஈசுவர பாரதற் திரியத்தையும் அவனே உபாயமாகின்ற கருத்தையும் தெரிவிக்கின்றன. மகள் : பெற்றோர் அல்லது உறவினர் கூட்டாமலேயே தலைவனுடன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து, தலைவனு டைய ஒப்புயர்வற்ற வனப்பு முதலியவற்றில் ஈடுபட்டு இருப்பவள் மகள்; குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல்