பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 விட்டு சித்தன் விரித்த தமிழ் அவனைக் கிட்டியல்வது உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்’ என்னும் பதற்றத்தை உடையவள் இவள். காலக் கழிவினை இவளால் பொறுக்க முடிவதில்லை. திருமந்திரத்தின் பிரணவத்தாலும் ந ம ஸ் ள | லு ம் எல்லோருக்கும் தலைவனாய் (சேஷியாய்) அறுதியிடப் பெற்றவன் எம்பெருமான். எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவனும் ஆவனே. பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் இவை உணரப் பெற்ற பின்பு, 'நாராயணாய என்று சொல்லினால் கூறப் பெற்றுள்ள எம்புெருமானுடைய சொரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றின் சேர்க்கையாலுள்ள பெருமையை நினைந்து மகிழ்பவள் இவள். எம்பெருமான் சாத்தியோ பாயமாக இருந்தால் தான் செய்த சாதனங்கள் முடிவுற்ற பிறகே சாத்தியமாகின்ற பேறு கிடைக்கக் கூடும் என்று பொறுத்திருக்கலாம். ஆனால் அவன் சித்தோபாயமாக இருப்பவன். அதனால் அவனைத் தாமதித்து அநுபவிப்ப தற்குக் காரணம் இல்லை; அவனே உபாயம் என்ற கோட் பாட்டையும் மீறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெறவேண்டும் என்ற பதற்றத்தை உடையவளாக இருக் கின்றாள் இவள். இந்த மனநிலைதான் மகள் (தலைவி) என்று குறிப்பிடப் பெறுகின்றது. மகள் பாவனையில் பேசும் பாசுரங்கள் யாவும் இந்த நிலையினையே குறிக்கின்றன. வேதாந்தங்களில் குறிப்பிடப் பெறும் பக்தி இங்ங்னம் ஆழ்வார்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்பதை அறிகின்றோம். இவர்கள் மாதவன்மீது கொள்ளும் காமம் 7. சொரூபம்-ஈசுவரனின் திவ்வியாத்தும சொரூபம்; ரூபம்-பகவானுடைய திவ்விய மங்கள விக்கிரகம்; குணம்ஆன்ம குணம், விக்கிரக குணம்: ஆன்ம குணங்கள்ஞானம், சக்தி முதலியன; விக்கிரக குணம்-அழகு, மென்மை முதலியன; விபூதி-நியமிக்கப்படும் பொருள் (ஐசுவரியம்). - - -