பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 விட்டு சித்தன் விரித்த தமிழ் (1) முதல் திருமொழி கற்றாய் இரங்கல்' என்ற துறை யைச் சார்ந்தது. தலைமகனைக் (இங்கு எம்பெருமானை). களவொழுக்கத்தில் புணர்ந்த தலைமகள் அவன் பிரிந்த நிலையில் ஆற்றாது வருந்தி வாய் பிதற்றிக் கண்ணிர் சொரிந்து மேனி மெலிந்து வடிவம் வேறுபடுகின்றாள். இவ் வேறுபாட்டை மட்டிலும் காணும் தாய் இதற்குக் காரணம் என்னோ? என்று கவன்று அவளது உயிர்த் தோழியை வினவ, அவள் உண்மையான காரணத்தைக் கூற, அது: கேட்ட தாய் இவ்வளவு இளமையையும் செயலின் பெருமை யையும் கூறி முறையிடுவது போல் அமைந்தது இத் திருமொழி, - - - . . . . . தாயின் நிலையை அடைகின்றார் பெரியாழ்வார். வயது வந்த பெண்ணானாலும் இன்னும் அன்பு மிகுதியால் தாயாருக்கு தன் மகளின் இளமையே தோற்றுகின்றது. தேலைவனை வசப்படுத்த உடல் அழகு, பேச்சு அழகு, உடை. யழகு ஆகிய மூன்றும் வேண்டும். என் செல்லக்குட்டிக்கு இந்த மூன்றும் இல்லையே. உடல் புழுதி படிந்த நிலையில் உள்ளது; சொல்லும் திருத்தமற்ற குதலைச் சொல்லாக உள்ளது; ஆடையையும் நன்றாக உடுக்கத் தெரியவில்லை. மணற் சோறாக்கும் சிறிய தூதையும் சிறு சுளகையும் கூட விட்டொழிக்க முடியாத நிலையிலுள்ளாள். இத்தகைய சிறு விளையாட்டி பையரவு அணைப் பள்ளியானோடு கைகலவி உண்டானது எப்படியோ?" என்று இரங்கு கின்றாள் (!). - தன் மகளின் இளமை நிலையை இன்னொரு வித மாகவும் எடுத்துரைக்கின்றார் அன்புள்ளம் கொண்ட திருத் தாயார். வாயிலே பற்களும் இன்னும் சரியாக முளைக்கவில்லை; கூந்தலும் சேர்த்து முடிக்கும் அளவு வளர்ந்து கூடவில்லை. இந்தப் பருவத்தில் சில தலை வணக்கமில்லாத கீழான பெண்பிள்ளைகளுடன் நட்புப் பூண்டாள்; அதன் பயனாகத் தாய்க்கடங்காத பொல்லாத