பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 235 இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து விட்டாள். * அம்மா, எங்குச் சென்றாய்? யாரோடு இணங்கி வந்தாய்?" என்று நான் வினவினால் தன் செயலை மறைப்பதற்காக கபடமற்ற சொற்கள் போல் தோற்றும்படி பேசுகின்றான். ஆனால் கண்ணா: மணிவண்ணா” என்று வாய் வெருவிக் கொண்டு அந்த மாயன்மீது மாலுறுகின்றதை வெளிப் படுத்திவிடுகின்றாள்- எங்கள் அப்பன் குதிருக்குள்ளே இல்லை' என்று சொல்வி அப்பன் குதிருக்குள் இருப்பதைக் காட்டுவது போல் ' என்கின்றாள் (2). இவ்விடத்தில் பரகால நாயகி (திருமங்கை யாழ்வார்): யின் r முள்ளெயிற் றேய்ந்தில, கூழை முடிகொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள்: (முள் எயிறு-முளைக்கும் பற்கள்; ஏய்ந்தில-நிரம்ம வில்லை; கூழை-தலைமயிர்; முடிகொடா-முடிக்கப் போதும்படி வளரவில்லை; தெள்ளியள்.தெளிந்து வார்த்தை சொல்ல வல்லவள்). என்ற பாசுரம் ஒப்பு நோக்கத் தக்கது. தோழிமாரோடு விளையாடச் சென்றவளுக்கு இவ்வளவு பிரமை ஏற்பட்டுவிட்டதே! என்று வியப்புறு: கின்றாள். உள்ளுக்குள்ளே மன நிறைவுதான். ஆனால் ஊர் என்ன நினைக்கும்? ஊர் வாயை மூடமுடியுமா? அவள் விருப்பப்படிதான் நடந்து கொண்டேன். தரையிலே நடக்கவிடாமல் ஒக்கலில் கொண்டு திரிந்தேன். இப்படி யெல்லாம் பாராட்டி, சீராட்டி வளர்க்கப் பெற்றவள் எனக்கும் தெரியாமல் தன் நெஞ்சை ஒளித்து வைத்தாளே! 10. பெரி, திரு. 8.2:9