பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 237 சிற்றில் போகத் தானமாகிய உடலையும் குடியிருப்பதாகிய வீடு முதலியவற்றையும் குறிக்கின்றது. உள்ளுறையில் முலை. பக்தியைக் குறிக்கின்றது (3) "இளம்பருவம் அறியாமை நிறைந்தது; கண்ட பொருள்களின்மீது ஆசைப்படுவது. இளம் பருவத்தை யுடைய என் மகளை அவளுடைய தோழிகள் வெளியில் விளையாட்டுக்கென்று கூட்டிச் சென்று ஒரு பெரிய அநர்த்தத்தை விளைவித்து விட்டனர். இதை யான் யாரிடம் சென்று முறையிடுவேன்? அவர்கள் செய்ததுதான் என்ன? சர்வேசுவரன் என்று மேல் வேடம் பூண்டுள்ள ஓர் ஆழமான கீழாற்றில் இவளைத் தள்ளிக் கரையேறமாட்டாது. அலமரும்படி செய்து விட்டனர். இந்த அலமாப்புக்கு என் மகள் சிறிதும் உரியள் இலள். இவள் இளம் பருவத்தினன். அட்டில் கலத்தில் இடப்பெறும் அகப்பை சோற்றின் சுவையை அறியமுடியாது என்கின்ற இவ்வளவு அறிவும்: இவளுக்கு இல்லையே; இத்தகைய இளம் பருவத்தவளை தோழிகள் படுத்தும் பாடு என்னே! என்று தனக்குள்ளேயே முறையிட்டுக் கொண்டு வருந்துகின்றாள். கீழாறு (மோழை) தன்னுள் இறங்கியவர்களை மீண்டு வெளியேற வொண்ணாதபடி அகப்படுத்திக்கொள்வது போல, எம்பெருமானும் தன்னைச் சேர்ந்தவர்களைப் புறம்பு போகாதபடி பற்றறுத்தலால், இந்த உருவகம் இங்கு அற்புத மாக அமைகின்றது (4). என் மகள் தனிமையாகக் காரியங்களை நடத்திக் கொண்டால் குறையில்லை. பல்லோரும் அறிய விளம்பரம் செய்வது போல் எம்பெருமானுடைய திருத் துழாய் மாலையை சூட்டிக்கொண்டதோடு நில்லாமல் அவன் எங்குள்ளான்? அவன் எங்கு உள்ளான்?' என்று தேடித். திரிகின்றாள். இவ்விடத்துள்ள அனுகூலர்கள் எனக்குச் சொல்வியது: இவ்வாறு இவள் வெளிப்படையாகத் திரி வதைத் தடுத்து நாம் நோக்காதொழியில் இக்குடிக்குப்