பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 239 என்பது பாசுரம். உலகில் பெண்கள் சிறப்பாக அணி களைச் செய்து பூட்டுகின்ற தாய்மாரை விரும்பிக் கலந்து பிரியாதிருத்தல் வழக்கமாக இருப்பது என் பெண் ஒருத்தி மாத்திரம் இறைப்பொழுதும் என்னோடிருக்க ஒருப்படாமல் தெருத்தெருவாக த்திரிந்து, பூவைப் பூவண்ணா!' என்று எம்பெருமானது அடையாளங்களைச் சொல்லி அழைத்து மயங்குகின்றாளே! என்று சில பெண் களை நோக்கிக் கூறுகின்றாள். மங்கைtர்!. இப்படித் தாய்ச்சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெறாத பூர்த்தி உண்டன்றோ உங்களுக்கு: என்ற கருத்துத் தோன்றும்; *உங்களது பெண்களின் படியும் இவ்வாறு தானோ ! என்று வினவியதாகவும் கொள்ளலாம். பொரு அற்றாள் என் மகள்; உம் பொன்னும் அஃதே"12 என்று திருமங்கை ஆழ்வார் பரகாலநாயகி நிலையில் தாய்ப் பாசுரமாக கூறியதும் இக்கருத்து பற்றியதே. (என் மகள்-என் பெண்; பொரு அற்றாள்-ஒப்பு இல்லாதவள்; உம் பொன்னும்உங்கள் பெண்ணின்படியும்; அஃதே - இவ்வண்ணம் தானோ?) - -: பாடகம் - பாத கடகம் என்ற வடசொற் சிதைவு. சிலம்பு - நூபுரம்; இட்டம் - இஷ்டம், வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு - வளர்த்தெடுத்த என்னோடு . பூவைப் பூவண்ணா! : உறவினர்கள். செய்த திருமணமாகில் புரோகிதரின் வாக்கினால் கணவன் பெயரை அறியலாம்; இயற்கைப் புணர்ச்சியாகையால் நிறம் மட்டிலும் தான் அறியமுடியும் - என்ற குறிப்புப்பொருள் காணலாம். திருத்தாயார் மேலும் தொடர்ந்து பேசுவது: சமங்கைமீர், பெண் தன்மைக்கு ஏற்ற குணங்களில் ஒன்றுக்கும் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) ஒரு கேடும் விளையாதபடி ஒழுங்குபட நிற்பவள் என் அருமைச் செல்வி. அத் திருக்குணங்களுக்கு கெடுதி விளைந்ததாக 12. திருநெடுந்.19