பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 விட்டு சித்தன் விரித்த தமிழ், ஒருவர் ஒரு பேச்சு எழுப்பினால்கூட அதைக் கேட்டுச் சகியாதவள் என் திருமகள். இப்படிப்பட்டவள் இன்று செய்த செயலை நோக்கினால் முன்பு தான் நின்ற. நிலையைப் பார்த்தால் அது எதிர்த்தட்டாக உள்ளது. இன்றளவும் அடக்கத்துடன் ஒடுங்கியிருந்த இவள் இன்று: காம்பைவிட்டு நீங்கின. அகப்பைபோல் தாயாகிய என்னை விட்டு அகன்று சிறிதும் நாணமின்றித் தெருவுக்கே வந்து, விட்டாள். வந்தவள், கண்ணன் பெயர்களைக் கூவி அழைத்து அவன் வரக் காணாமையால் மயக்கமுறு. கின்றாள். இதுதான் முன்பு நின்ற நிலைக்குச் சிறிதும் பொருந்து மாறில்லை என்கின்றாள். (7) திருத்தாயார் தன் மகளைப்பற்றி இங்ங்ணம் கவலைப். பட்டுக் கொண்டிருக்க, மகள் என்ன செய்கின்றாள்? என்பதைக் காண்போம். காறை பூணும் கண்ணாடி காணும்தன் கையில் வளைகுலுக்கும் கூறை யுடுக்கும், அயர்க்கும்,தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும், தேறித் தேறி நின்று - ஆயிரம்பேர்த் தேவன் திறம்பிதற்றும்; மாறில் மாமணி வண்ணன் மேலிவள் மாலுறு கின்றாளே (8). [காறை - கழுத்தணி, கூறை . புடவை; அயிர்க்கும் . தளர்ச்சியடைகின்றாள்; திருத்தும் . ஒழு ங் கு படுத்துவாள்; தேறித் தேறி . மிகவும் தெளிந்து; பிதற்றும் - வாய் வெருவுவாள்; மாலுறுதல் .. மோகித்தல்1 என்பது பாசுரம். எம்பெருமான் வரவை எதிர்பார்த். திருக்கும் மகள் ஏதாவது ஒன்றைச் செய்து அவனை அடைய வேண்டும் என்ற உறுதி கொள்கின்றாள். அவன் மனம் இழுப்புண்ணுமாறு தன்னை அணி செய்து கொண்டால் அவன் தானே வந்து மேல் விழுவன் என்று: