பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 24? முதன் முதலாக அவன் கண்டு மகிழ்ந்து கட்டிக் கொள்ளு மிடமான கழுத்தைக் கண்டிகை முதலிய அணிகளால் அலங்கரித்துக் கொள்ளுகின்றாள். நகையும் கழுத்துமான அந்த சேர்த்தியழகைக் கண்ணாடியில் பார்த்துக் கொள் கின்றாள், அவன் உகக்கும்படி வாய்த்திருக்கின்றதோ இல்லையோ?” என்று. உடம்பு பூரிக்கின்றது, ஏதோ காணாதது கண்டதுபோல்! தன் கைகளில் உள்ள வளையல்களைக் குலுக்கிப் பார்க்கின்றாள்; இனி அவை தொங்கிப் போகாமல் கைக்குப் பொருத்தமாக இருக்கு மென்று எண்ணம். ஆடையணிந்து கொள்வதில் பொறுப் பற்று இருந்தவள் இப்போது அழகான புடவையை அழகாக உடுத்திக் கொள்ளுகின்றாள்; அது மணமகள் வீட்டிலிருந்து வந்ததாகவே எண்ணம். எவ்வளவு நேரமாக ஈடுபடுகின்றாள் ஆடை அணிகளைத் திரும்பத் திரும்ப ஒழுங்கு செய்து கொள்வதில் இந்த நிலையில் மறதியும் (அறிவிழந்த நிலை) உண்டாகின்றது. அந்த நகையை அணிந்து கொண்டோமோ? இந்த நகையை அணிந்து கொள்ளவில்லையோ?" என்று அடிக்கடித் தொட்டுப் பார்க்கின்றாள்; கண்ணாடியிலும் நோக்குகின்றாள். கண்ணாடி என்று அறியாமல் அதில் தோன்றும் காறை யையும் தொட்டுப் பார்க்க முயல்கின்றாள். இப்படி அறிவிழந்தவள் திடீரென்று எதையோ நினைவுபடுத்திக் கொண்டவள்போல கொவ்வைப்பழம்போல் சிவந்திருக் கின்ற தன்னுடைய திருப்பவழத்தையும் கண்ணாடியில் நோக்குகின்றாள். இப்போது நம்பிக்கை அலங்காரங் களில் இல்லை; இயற்கையழகில்தான். ஆனால் பல தடவை பார்த்துக் கொள்ளுகின்றாளே; அந்தச் சிவப்பை இன்னும் எப்படி அதிகப்படுத்தலாம் என்ற எண்ணமா? அல்லது இளநகையிலேயே அந்த வாயை இன்னும் அழகு செய்து கொள்ள விரும்புகின்றாளா? இங்ங்னம் கலங்கித் தெளிந்து கொண்டிருக்கும் காதலியை விட்டு மீண்டும் வெளியே மற்றப் பெண்களிடம் வி. 16