பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 243 இந்தத் தாயின் நிலையினைக் கூறுவது இந்த இரண்டாம் திருமொழி. திருத்தாயார் பேசுகின்றாள்: ஒர் அழகான தாமரைத் டாகம், அதில் செந்தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன ஒருநாள் அந்தப் பூக்களின் மேல் பணி சொரிகின்றது. இதழும் மகரந்தமும் உதிர்ந்து விடுகின்றன. ஆ என்ன குளிர்ச்சி! என்ன மலர்ச்சி! என்ன சிவப்பு: என்ன நறுமணம்!’ என்று வியப்பெய்தும்படி யிருந்த அந்தப் பொய்கை எப்படியாகி விட்டது! அப்படி அழகழிந்து வெறித்துப் போயிருக்கின்றது என் மகள் இருந்த வீடு' என்கின்றாள். நல்லதோர் தாமரைப் பொய்கை நாள்மலர் மேற்பனி சோர அல்லியும் தாதும் உதிர்த்திட்டு அழகழிக் தாலொத்த தாலோ: இல்லம் வெறியோ டிற்றாலோ: என்மகளை எங்கும் கானேன், மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப் புறம்புக் காள்கொலோ: (1) (பொய்கை.குளம்; நாள்மலர். அப்போது அலர்ந்த பூ: சோர.பெய்ய, அல்லி-உள்ளிதழ்; தாது.மகரந்தம்; வெறிஓடிற்று - வெறிச்சென்றுள்ளது; மல்லர். சாணுாரன், முஷ்டிகன்) . என்பது தாயின் பேச்சு அமைந்த பாசுரம். இத்திரு மாளிகையில் பெண் பிள்ளை இருந்தது ஒரடி நிலமானாலும் விடுமுழுதும் அவளே இருந்ததாகத் தாய்க்குத் தோற்றிக் கிடந்தபடியால் 'இல்லம் வெறிச் சோடிற்றாலோ: என்கின்றாள். - ஐயங்களெல்லாம் இரண்டு ೩-ಹಣ675 பற்றிப் பிறக்குமாதலால், இங்குக் கம்சன் இருப்பிடமான