பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 விட்டு சித்தன் விரித்த தமிழ் மதுரையில் புகுந்தாளோ? அன்றி, அதனருகிலுள்ள திருவாய்ப்பாடியிற் புகுந்தாளோ? என்று ஐயமுறுகின்றாள். ஒருவருக்கொருவர் பண்ணுகின்ற காதல் விளையாட்டு களினால் இருவரும் மயங்கி மெய்மறந்து கம்சன் நகரில் புகுந்தார்களாகில் தீராத் துன்பம் விளையுமே! என்ற ஜயந்தான் திருத் தாயார் நெஞ்சினுள் நடமாடுகின்றது. பெரிய திருமொழியில் கள்வன் கொல்? யானறியேன் (3.7:1) என்ற திருமொழி இதனுடன் ஒரு புடை ஒத்திருக்கும். அடுத்து, :பொருந்திய ஞானம் சிறிதும் இல்லாத இடையர்களிடம் ஒர் அரிய குணம் உண்டு. தீயவையா யுள்ள தங்கள் கன்றுகளை உங்களுடையவை என்று பிறருக்குக் காட்டி நல்லவையாயுள்ள அவர்கள் கன்றுகளைத் தங்களுடையனவாக்கிக் கொள்வார்கள்; பிறருடைய அழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவு வழியால் நிலை பெயர்த்துக் கொண்டு போதலும் உண்டு, இப்படி என் மகளைத் திருடிக் கொண்டு போய்விட்டான். இவ்வாறு அவன் செய்த தீமையானது எங்கள் குலத்துக்கு நிரந்தர மான பழிப்பை விளைவிக்குமோ?' என்கின்றாள் (2). கண்ணபிரான் என் மகளைக் கிறி செய்துகொண்டு கொண்டு போனமை பற்றி இனி சிந்தித்துப் பயன் இல்லை. புக்ககத்துத் தலைவர்கள், இவளுக்குத் திருமணச் சடங்கு களாகச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களை ஒன்று. விடாமல் செய்து சீர்மை குன்றாமல் அலங்காரங்களையும் அமைத்து மணமாளிகையில் எல்லோருக்கும் அழைப்பு விடுத்து இவளைக் கண்ணனுக்குத் தேவியாகத் தருகின்றோம் என்று வெளிப்படையாகச் சொல்லிப் பிறகு திருமண நாளன்று சாதிக்கேற்ற ஆசார முறையின்படி மணவறையில் அவங்கார பீடத்தின்மேல் அரசங்கிளையை (அரசாணியை) இவளை வலம் வரும்படி செய்வித்து திருமணத்தின் அறிகுறியாக ஊரெங்கும் அலங்கரித்து இவ்வகைகளால் கொண்டாட்டமும் கோலாகலமுமாக