பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 245 இருப்பார்களோ? அன்றி, கொண்டாட்டம் ஏதுக்கு?’ என்று உதாசீனப்படுத்துவார்களோ?' என்று ஐயுறுகின்றாள் திருத்தாயார். (3). எனக்கு ஒரே ஒரு மகள்தான். அவளைப் பெரிய பிராட்டியாரைப் போல் உலகோர் அனைவரும் புகழும்படி வளர்த்தேன். இப்படி வளர்த்த இவளை எம்பெருமான் தானே நேரில் வந்து கைப்பற்றிக் கொண்டு போய் விட்டான் என்று எண்ணாதவற்றையெல்லாம் எண்ணி, ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்! (நிறைந்த-பரவின; திருமகள்.இலக்குமி; பெரிய பிராட்டியார்; செங்கண்மால்-சர்வேசுவரன்) என்று பலபடியாகப் புலம்புகின்றாள். செங்கண்மால் என் மகளை இப்படி ஒருவரும் அறியாமல் கைக்கொண்டு போவதற்கு பல இரவுகளில் கண் விழித்ததால் செங்கண் மாலாயினன்' போலும் என்ற தொனிப் பொருளும் தோற்றுகின்றது. பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமக ளைக்கண் டுகந்து மணாட்டுப் புறஞ்செய்யும் கொ(ல்)லோ? (பெருமகள்.யசோதை, மணாட்டுப்புறம்.மணவாட் டிக்குச் செய்யக்கடவதான சீர்மைகள், என்று தொடர்ந்து பேசுகின்றாள். போனது போகட்டும். அதைப்பற்றி நினைத்துப் பயன் இல்லை. போன இடத்தில் இவளுக்கு மாமியாரான யசோதைப் பிராட்டி இவளுடைய அழகு, கழிபெருங்காதல் முதலிய அருங்குணங்களைக் கண்டு பெறாப் பேறு பெற்றோம் என மகிழ்ச்சியுற்று