பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 விட்டு சித்தன் விரித்த தமிழ் திருமணப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர்மைகளைச் செய்வாளோ? அன்றி, இலெளகிகத்துக்குத் தக்க அளவு மனப்பூர்வமாக இல்லாதபடி செய்வாளோ?' என்று ஐயுறு கின்றாள். திருவாய்ப்பாடியிலுள்ளார்க் கெல்லாம் தலை வரான நந்தகோபருடைய தேவியானமை பற்றி யசோதை பெருமகள்' எனப்பட்டாள். பெரும்பிள்ளை: என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் (2.2:6) என்றது காண்க. கூரத்தாழ்வான் திருநாட்டுக் கெழுந்தருளினபோது எம்பெருமானார் இப்பாசுரத்தை நாவினால் நவிற்றிக் கதறியழுதார் என்ற ஐதிகம் ஒன்று உண்டு (5). - மாமியார் சீராட்டுதலைப் பற்றி ஐயுற்ற திருத்தாயார் மாமனார் சீராட்டுதலைப்பற்றி ஐயுறுகின்றாள் திருத் தாயார். தம்மாமன் கந்தகோ பாலன் தழீஇக்கொண் டென்மகள் தன்னை செம்மாங் திரேய்என்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும்செவ் வாயும் கொம்மை முலையும் இடையும் கொழும்பனைத் தோள்களும் கண்டிட்டு இம்மக ளைப்பெற்ற தாயார் இனித்தரி யாரென்னும் கொ(ல்)லோ (5) [தம்மாமன்.மாமனாராகிய நந்தகோபாலர்: தழிஇக் கொண்டு.தழுவிக் கொண்டு; செம்மாந்திரு. செவ்வனே நில்; களல்-மீன்; வாய்-திருப்பவழம்; கொம்மை-பெருத்திருக்கின்ற; பணை-மூங்கில்) என்பது பாசுரம், என் மகளின் மாமனாரான நந்தகோபர் இவளையழைத்துத் தழுவி முத்தமிட்டு (இன்று மேனாட்டார் செய்வது போல!) பெண்ணே, நாணத்தால் தலைகவிழ்ந்து தரையைக் கீறிக்கொண்டு நிற்காமல்