பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. சமுதாயக் கண்ணோட்டம் தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்தையும் (கி.மு. 500-கி. பி. 200) நீதி நூல் காலத்தையும் (கி.பி 100.500) அடுத்துத் தெளிவாகக் காணப் பெறுவது பக்தி இயக்கக் காலம் (கி.பி 600.900) ஆகும். கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் சமயப் பெரியார்களான நாயன்மார்களும் வைணவப் பெரி யாழ்வார்களான ஆழ்வார்களும் ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தனர். நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த (அரசியல் ஆதரவால்?) பெளத்த சமண சமயங்களை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்குக் கலை நயத்துடன் கூடிய பக்திப் பாடல்கள் நன்முறையில் பயன்பட்டன. ஆழ்வார்களில் பலர் இசையோடு பாசுரங் களைப் பாடிக் கோயில்தோறும் இறைவனை வழி ఓ! -b_శ T.

பண் ஆர் தமிழ்" (திருவாய், 9.8:1) செயிரில் சொல் இசைமாலை (3.2:11) பால் ஏய் தமிழர் இசைக்காரர், பத்தர் பரவும் ஆயிரத்தின் (1.5:11) என்ற திருவாய் மொழியில் வரும் சொற்றொடர்களும் விழுமிய இசையி னொடு ஒலி சொலும் அடியவர் (பெரி. திரு. 8.7.10) என்ற பெரிய திருமொழித் தொடரும் இப்பாசுரங்கள் இசையுடன் பாடப்பெறுவன என்பதை வலியுறுத்தும். திருவாய் மொழி முழுமைக்கும் பெரிய திருமொழியில் கிட்டத்தட்ட