பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கண்ணோட்டம் 251. முக்கால் பங்கு அளவிற்கும் பண். தாளக் குறிப்புகள் அமைந்திருத்தல் கவனத்திற்குரியது. குருசுடர் கம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே (கண்ணிநுண் - 2). என்ற மதுரகவிகளின் பாசுரப் பகுதியும், பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி தென்னா என்னும் என்.அம்மான் திருமா லிருஞ்சோ லையானே (திருவாய் 10.7:3} என்ற நம்மாழ்வாரின் திருவாக்கும் ஆழ்வார்கள் இசையோடு பாடினர் என்பதைப் புலப்படுத்தும். இசை மக்களை ஒன்றாகப் பிணைக்கும் பெருவிசை என்பதை நாம் அறிவோம். - பக்திநெறி: சமணர்களும் பெளத்தர்களும் புலனடக் கத்தையும் உண்ணா நோன்பு, இன்ப வெறுப்பு முதலிய வற்றையும் மக்களிடையே வற்புறுத்திக் கொண்டிருந்தனர். துறவறத்தையே பெருமையோடு பேசி அதனை மக்க வரிடையே பெயரளவில் பரப்ப முனைந்தனர். ஆழ்வார் களும் நாயன்மார்களும் பக்தியைப் போற்றினர்; பக்தி நெறியை மக்களிடையே வளர்க்க முனைந்தனர்; அதற்கு இசைவாக இருக்கும் ஆடல், பாடல் முதலான கலைகளைப் போற்றிப் பாராட்டினர். இல்லறநெறியைப் பின்பற்றி அதில் இன்பமுற்றிருந்தாலும், எந்தத் தொழிலை மேற் கொண்டிருப்பினும் உள்ளத்தை இறைவனுக்கே வைத்து வாழ்க்கை நடத்தினால் அதுவே போதும் என்றனர். பல வகைக் கலைகளையும் வளர்க்கும் பண்ணைகளாகத் திகழ் வதற்கு அவர்களுடைய பக்தி இயக்கம் துணையாக அமைந்தது. மக்களிடையே அவர்களின் இயக்கம் பரவு