பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.252 - விட்டு சித்தன் விரித்த தமிழ் வதற்குத் தமிழ்ப் பாடல்கள் இசையோடு அமைந்து பெருந் துணைபுரிந்தன. பெரியாழ்வார் திருமொழியில் பக்திநெறியின் சிறப் பினை விளக்கும் பாங்கில் ஒரு திருமொழி (4.5) அமைந் துள்ளது. இதில் பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை" ஆழ்வார் பல்வேறு பாங்கில் விளக்குகின்றார். எம்பெரு மானின் ஆயிர நாமங்களை நவிற்றுவதற்கு வாய்ப்பில்லாது போயினும் திருமண்காப்பின்போது நவிற்றப்படும் பன்னி ரண்டு திருநாமங்களையாவது நவிற்றுவது பயன்தருவது. இந்தப் பன்னிரண்டு திருநாமங்களாவன: கேசவன், நாரா யணன், மாதவன், கோவிந்தன், விட்டுணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், சிரீதரன், இருடிகேசன், பத்ம நாபன், தாமோதரன் என்பனவாகும். இவை பெரியாழ் வார் திருமொழியில் (2.3)-காது குத்தலைக் கூறுவதுகாட்டப் பெற்றுள்ளன. பக்தியின் பெருமையை விளக்கும் திருமொழியில் (4.5) கேசவன், நாராயணன், மாதவன், இருடீகேசன், மதுசூதனன், கோவிந்தன் என்ற ஆறு திருநாமங்கள் மட்டிலுமே குறிப்பிடப் பெற்றுள்ளன. இத்திருமொழியில் ஆழங்கால் பட்டு உய்வது நம் கடமை. பக்தியின் பெருமையைப் பற்றிப் பாரதியார், பக்தியினாலே - இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடி ! சித்தங் தெளியும் - இங்கு செய்கை பனைத்திலும் செம்மை பிறந்திடும். வித்தைகள் சேரும், - கல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடைத் 1. திருவாய் 2.7 பன்னிரு திருநாமப் பாட்டு காண்க.)