பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கண்ணோட்டம் 253; தத்துவம் உண்டாம் - கெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். . என்று பேசுவார். இதனைத் தொடர்ந்து ஆறு பாடல்கள் வருகின்றன. இவை யாவும் இகத்தில் ஏற்படும் பலன் களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. பெரியாழ்வார் இவற்றைக் குறிப்பிடாமல் பக்தர்களாய் வாழ்ந்து இறப் பவர் பெறும் பேற்றை மட்டிலும் குறிப்பிட்டிருந்தாலும் யாவும் பெற வாய்ப்புண்டு என்பதை உபலட்சணமாகக் கொள்ளலாம். இனி, பெரியாழ்வார் கூறுவனவற்றைக் காண்போம். அகப்பற்று, புறப்பற்றுகளை வளரச் செய்ய வழி: வகுப்பதான சம்சாரத்தில் ஆழங்கால்பட்டுப் பழுதே பல பகலும் போக்கினாலும் உயிர் முடியும் அளவிலாகினும், இந்தச் சம்சாரத்தில் நெஞ்சைப் பறிகொடுக்காது எம்பெருமான் திருநாமங்களை வாய்விட்டு நவிற்றுபவர்கள் மேலுலகத்தில் பெறும் பரிசுகளைச் சொல்லித் தலைக் கட்ட நம்மால் இயலாது என்கின்றார். ஆசை வாய்ச்சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாச வார்குழ லாளென்று மயங்கி மாளும் எல்லைக்கண் வாய்திற வாதே கேச வா!புரு டோத்தமா! என்றும் கேழ லாகிய கேடிலி என்றும் பேசு வாரவர் எய்தும் பெருமை பேசு வான்புகில் கம்பர மன்றே {!). (ஆசைவாய்.ஆசையுள்ள இடம்; அத்தன்-தந்தை; பூமி.நிலம்; என் குழலாள்-என் மனைவி; மயங்கி. மோகமுற்று, மாளும் எல்லை.இறக்கும் தருணம்: 2. பா. க : வேதா. பாடல்கள் - பக்தி - (1)