பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 விட்டு சித்தன் விரித்த தமிழ் கேழல்.வராகம்; கேடு இவீ. அழிவில்லாதவன்; எய்தும்.அடையக்கூடிய, நம்பரம்.நம்மால் பேசித் தலைக்கட்டுதல்; என்பது ஆழ்வார் பாசுரம், வாழ்நாள் முழுவதையும் எம்பெருமான் திருநாம சங்கீர்த்தனத்தாலேயே பொழுது போக்கினவர்களின் பெருமையை எம்பெருமானாலும் பேசித் தலைக்கட்ட முடியாது. திண்டாவழும்பும் செந்நீரும் சீயுநரம்புஞ் செறி தசையும், வேண்டா நாற்றமிகும் உடலை (திருவ கலம். 17) என்று திவ்விய கவியின் பாசுரப்படி பற்பல நிலைகட்குக் காரணமாக இருக்கும் இந்த உடம்பின் வேதனைக் கனத் தினால் மயக்கமுற்று மரணமடைவதற்குமுன் வாயினால் எட்டெழுத்து மந்திரத்தை அதுசந்தித்துக்கொண்டு முடி மேல் கைகூப்பித் தொழுபவர்கள் பரமபதம் போய்ச் சேர்வார்கள் என்பதிலும் இறையும் ஐயமில்லை; அப்படிப் போய்ச் சேர்ந்த பிறகு சில நித்திய முக்தர்கள் நாங்கள் உத்திரவாதம் செய்கின்றோம் என்று தங்களை ஈடுகாட்டி னாலும் இவர்களை அவ்விடத்திலிருந்து இந்தப் பிரகிருதி மண்டலத்திற்கு அனுப்ப வல்லார் யாரும் இல்லை என்கின்றார் (2). இதனால் ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி, வழுவிலா அடிமை செய்துகொண் டிருப்பர் (திருவாய் 3.3:1) என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. தினைவுப் பிசகாக எங்கேனும் ஏதாவதொரு பொருள் வைக்கப்பெற்றிருந்தால், அதைச் சொல்லு சொல்லு" என்று எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டு வற்புறுத்தினாலும் அவர்கட்கு மறுமாற்றம் சொல்லுகைக்கும் வாயைத் திறக்கமாட்டாதபடி மரணநிலை வந்து கிட்டுவதற்கு முன்னர், இதயம் என்ற ஒரு சந்நிதியை ஏற்படுத்தி அந்தச் சந்நிதியில் மாதவன் (திருமால்) என்ற தேவதையை எழுந்தருளச் செய்து அதன்மீது 'பக்தி' என்கிற மலரை