பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கண்ணோட்டம் 255 இடவல்லார்க்கு யமபடர்களால் வரும் துன்பத்தினின்றும் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம். இக்கருத்தை விளக்கும் ஆழ்வார் பாசுரம்: சோர்வி னால்பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்த காலம் அடைவதன் முன்னம் மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாத வன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அறவ தண்டத்தில் உய்யலு மாமே (3). (சோர்வு-நினைவுப் பிசகு, சுற்று இருந்து - சூழ்ந்து கொண்டு; அந்தகாலம்-இறுதிக் காலம்; மார்வம். இதயம்; ஆர்வம்.பக்தி; அறவ தண்டம்.யமலோ கத்தில் படும் வேதனை) இந்தப் பாசுரத்தைப் பன்முறை ஓதி ஓதி உளங்கரைதல் வேண்டும். உயிர் உடலை விட்டு நீங்குவதற்கு முன்னர், மேல் முகமாக மூச்சு கிளம்புதலும் நெஞ்சு இடிந்து விழுதலும், காலும் கையும் விதிர் விதிர்க்கப் பெறுதலும் நிகழ்தலைக் காணலாம். பிறகு நெடுந்துரக்கம் (மரணம்) சம்பவிக்கும். இதற்கு முன்னர் சகல வேதங்களுக்கும் காரணமாகின்ற "ஓம்" என்ற பிரணவத்தை உச்சரிக்க வேண்டிய முறையில் உச்சரித்து! கடல் நிறவண்ணனாகிய எம்பெருமானை 3. முமுட்சுப்படி-33. 4. பிரணவத்திற்கு ஒரு மாத்திரையும் உண்டு; இரண்டு மாத்திரையும் உண்டு; மூன்று மாத்திரையும் உண்டு. ஒன்று இரண்டு மாத்திரைகளை உடையதாகப் பிரணவத்தை உச்சரிப்போர் கீழான பலனையே அடைவர்; அதனை மூன்று மாத்திரை உள்எழ வாங்குபவர்கட்கு பரமபதம் உண்டு என்று பூரீபாஷ்யம் தெளிவுபடுத்துகின்றது (ஈகrதி கர்மாதி கரணம்).