பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 விட்டு சித்தன் விரித்த தமிழ் ஆச்ரயித்தால் வைகுந்தத்தில் அடியார் குழாங்களை உடன் கூடவும் பெறலாம் என்கின்றார் (4). மரணகாலம் கிட்டும் போது, பார்க்கும் இடமெங்கும் யமபடர்கள் தென்படு: வதாக நினைத்து அதனால் உண்டாகும் அச்சத்தினால் கிடந்த நிலையிலேயே சிறுநீர் பெருக்குவர்; வாயில்விட்ட பொரிக் கஞ்சி உள் இழிய மாட்டாது கழுத்தை அடைத்துக் கடைவாய் வழியாகப் பெருகும்; இப்படிப்பட்ட நிலைகளை அநுபவித்துக் கொண்டு கிடக்கும்போது, எம்பெருமானின் திருநாமம் உச்சரிக்க வாய்க்காது மாளப்பெற்றால், யமலோகம் செல்ல நேரும்; செல்லும் வழியில் செந்நாய்கள் துடையைக் கவ்வும், யமகிங்கரர்களும் சூலம் கொண்டு குத்துவர்; இடுப்பிலிருந்து ஆடையும் நழுவிவிடும். இப்படிப் பல துன்பங்களை அநுபவிக்க நேருமாதலால், இவற்றுக் கெல்லாம் இடம் அறும்படி முந்துற முன்னமே எம்பெரு, மானை ஏத்தினால் இடர்ப்பாடு ஒன்றும் ஏற்பட நேராது. என்கின்றார் (5). பிராணம், அபாநம், வியாநம், உதாநம், சமானம் என்ற பஞ்ச பிராணன்களும் உடலைவிட்டு ஒழிந்த பின்பு அருகிலுள்ள உறவினர்கள் அந்தப் பிணத்தின் மூக்கில் கையை வைத்துப் பார்த்து ஆவி நீங்கிற்று" என்பதை. உறுதியாகத் தெரிந்து கொண்டு அவ்வுடலில் ஆசையை விட்டு விடுவார்கள் எவரேனும் வந்து அவர்க்குத் திருமேனி எப்படி உளது?’ என்று வினவினால் அதற்கு, அவர்கள் வாய்விட்டு மறுமொழி சொல்ல மாட்டாமல் உயிர் போயிற்று’ என்பதைக் கையை விரித்துக்காட்டி விடுவர். இப்படி உறவினர்கள் ஒரு மூலையிலிருந்து கொண்டு தலைகவிழ்ந்து புலம்பும்படியான நிலை நேரிடு. வதற்கு முன்னர் திருப்பாற்கடல் நாதனை நெஞ்சால் நினைத்துக் கொண்டு பிரபத்தியை அநுட்டிப்பவர்கள் நிரந்தரமாக அநுபவிக்கக் கூடிய பேற்றைப் பெறுவார்கள் என்கின்றார் (6).