பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கண்ணோட்டம் 257 ஒ ரு வ ர் மரணப்படுக்கையில் இருக்கும்போது உறவினர்கள் திரள் திரளாகக் கூடுவர். இறந்தவன் குற்றங்கள் பல கிடக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு சிறிது நன்மையாக தோன்றும்படியானவற்றை மட்டிலும் சொல்லி ஒப்பாரிப் பாடல்களைப் பாடிப்பாடி ஒரு பாடை யில் படுக்கவைப்பர்; புத்தாடையால் பிணத்தை மூடுவர், பிறகு நரிக் கூட்டத்திற்கு ஒரு பாகுக்குடத்தைப் பச்சை யாகக் கொடுப்பதுபோல் பினத்தைச் சுடுகாட்டிற்குச் சுமந்து செல்வர். இவ்வாறு எடுக்கும் நிலை ஏற்படுவதற்கு முன்னர், கெளத்துவத்தையுடைய எம்பெருமான் பக்கவில் சேர்ந்த நெஞ்சையுடையவர்களாயின் யமபுரம் செல் வதைத் தவிர்த்து பரமபதம் சென்று உய்யலாம் என் கின்றார் (8). ஈர நெஞ்சு அற்றவர்களான யமதூதர்கள் தயைதாட்சண்யமின்றி எருதுகளை அதட்டி ஒட்டுபவர்கள் போல் வந்து வலிவுள்ள பாசக்கயிற்றினால் கட்டி அடித்துத் தலைகீழாக யமபுரத்திற்கு இழுத்துச் செல்வதற்கு முன்னர், அந்தத் தென்னவனின் மன்னனான எம்பெருமான் இன்னவன் இணையான் என்று சொல்லி அவற்றை நெஞ்சாலும் மனனம் பண்ணி உள்ளத்து இருள் அற அப் பெருமானை நோக்கி உடல் உள்ள அளவும் மதுசூதனனே!" என்று அவனுடைய திருநாமங்களையே சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பரமபதம் சென்றடைந்து நித்திய சூரிகளின் கைங்கரியத்தைத் தாம் பெறுவதற்கு மன்றாடி நிற்பர் என்கின்றார் (7). இதனைக் கூறும் ஆழ்வார் பாசுரம்: தென்ன வன்தமர் செப்ப மிலாதார் சே.அ. தக்குவார் போலப் புகுந்து பின்னும் வன்கயிற் றால்பிணித் தெற்றிப் பின் முன் னாக இழுப்பதன் முன்னம் வி.17