பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 விட்டு சித்தன் விரித்த தமிழ் இன்ன வன்இனை யானென்று சொல்லி எண்ணி யுள்ளத்து இருள் அற நோக்கி மன்ன வன்மது சூதனன் என்பார் வான கத்துமன் றாடிகள் தாமே (7). (தென்னவன்.எமன்: தமர்.கிங்கரர்கள்; சே.எருது: பின் முன்.தலைகீழாக: உள்ளம்.நெஞ்சு; வான் அகம்.வைகுந்தம்: என்பது. இதனைப் பன்முறைப் படித்து ஆழ்வார் சித்திரிக் கும் காட்சியையும் அதனைத் தவிர்க்கும் முறை யையும் உள்ளத்தில் இருத்துதல் வேண்டும். மரணப் படுக்கையிலிருக்கும்போது வாயு விகாரத் தினால் வாய் ஒருக்கடுத்து வலிக்கும்; நெடுநாளாக உணவு அற்றுக் கிடப்பதனால் உள்ளிழிந்துள்ள கண்கள் மருள மருள் விழிக்கும்; இந்த விகாரங்களைக் கண்ணுறும் தாயர், தந்தையர், மனைவியர் முதலானோர் மூலைக் கொருவ ராக அமர்ந்து கொண்டு கண்ணிர் பெருக்கிக் கதறிக் கதறி அழுவர்; பிலாக்கணம் பாடுவர். இப்படிப்பட்ட நிலையில் உயிர் நீங்கிற்று என்று சிலர் வந்து மார்பில் நெருப்பைக் கொட்டுவர். உடல் வலிவுற்று இருக்கும் கால்ங்களைக் கொன்னே கழித்தவர்கள் இறுதிக் காலத்தில் படும்பாடு இதுவாகையால் அப்போது எம்பெருமானின் திருநாமங்களை அநுசந்திக்கும் பேறு பெறாமல் யமகிங் ர்ெகளின் நலிவுக்கு ஆட்படவேண்டி வரும். ஆதலால் உடல் கட்டுக் குலைவதற்கு முன்னமே எம்பெருமானை எல்லாவித உறவினனாகப் பற்றப் பெற்றால் யம தண்டனைக்குத் தப்பிப் பிழைக்கலாம் என்கின்றார். வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற தாயொரு பக்கம் தந்தை யொருபக்கம் தார மும் ஒரு பக்கம் அலற்ற