பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கண்ணோட்டம் 259 தீயொரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற மாயொரு பக்கம் கிற்கவல் லாருக்கு அறவ தண்டத்தில் உய்யலும் ஆமே (9) (வலிப்ப.வலிக்க; வார்ந்த-பெருகா நின்ற; அலற்ற. கதறிஅழ; சிக்கெனச் சுற்றம்.நிருபாதிக பந்து: அறவதண்டம். யமதண்டனை) என்பது இக்காட்சிகளை நம்மனத்தில் நிறுத்தும் அற்புதப் பாசுரம், பாசுரத்தைப் பன்முறைப் பாடிப்பாடி அநுசந்திக்க வேண்டும். இங்கனம் பலகோணங்களில் பக்தியின் பெரு ைமபேசப் பெறுகின்றது. பிள்ளைகட்குத் திருநாமம் இடுதல்: இல்வாழ்க்கையின் இன்றியமையாத பகுதி மனைமாட்சி; அவ்வாழ்க்கைக்கு முத்தாய்ப்பு வைத்த மாதிரி அமைவது நன்மக்கட்பேறு. இதனை வள்ளுவப் பெருந்தகை, மங்கலம் என்ப மனைiாட்சி; மற்றதன் கன்கலம் கன்மக்கட் பேறு என்று போற்றுவர். இல்வாழ்வில் பிள்ளைகட்குத் திருநாமம் இடுதல் ஒரு முக்கிய சடங்காக நடைபெற்று வருவதை அறிவோம். ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்பப் பெயரிட்டு மகிழ்கின்றனர். அரசியல் தலைவர்கள், சமூகத் தொண்டர்கள், சமயப் பெரியார்கள், சினிமா நட்சத் திரங்கள் போன்றவர்களின் பெயர்களைச் சூட்டுதல் இன்று நாகரிகமாகவே வழங்கி வருகின்றது. தவிர, தனித் தமிழில் பெயர்களை இடுதலும் தமிழ்ப் பற்றாளர்களின் பழக்கமாகி வருகின்றதையும் காண்கின்றோம். ஆயினும், எம்பெருமானின் திருநாமங்களை இட்டு மகிழ்வதையும் ஒரு சிலரிடம் மரபாக இருந்து வருவதையும் பார்க்கின்கிறோம். எம்பெருமானின் மேன்மையைக் காட்டிலும் அவனைக் 5. குறள்-60