பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 விட்டு சித்தன் விரித்த தமிழ் குறிக்கும் திருநாமத்தின் மேன்மை உயர்ந்ததாகும் என்ற சாத்திர உண்மையைக் கண்டறிந்தவர்கள் இவர்கள். கோவிந்த நாமத்தால் திரெளபதிக்கு புடவை சுரந்ததும், கத்திரபந்தின் வரலாற்றில் கோவிந்த நாமத்தின் பங்கும், முத்கலன் வரலாற்றில் கிருஷ்ணாய' என்பதன் செயலும் அஜாமிளன் வரலாற்றில் நாராயணன்' என்ற திருநாமத் தின் மகிமையும் இவர்கட்கு அற்றுபடியான செய்திகள், எம்பெருமானின் திருப்பெயரைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமின்றியே சொன்னாலும் தம் குழந்தைகட்கு இப்பெயரை இட்டு அழைக்கினும், பரிகாசமாகவோ இழிவாகவோ பொருளுணர்ச்சியின்றியோ சொல்லினும் அஃது இரட்சண்யமாகிய தன் காரியத்தினின்றும் தவறாது. எம்பெருமான் திருநாமத்தைப் பரிகாசமாயும், ஏளனமாயும் அடிக்கடிக் கூறிக் கொண்டிருந்த சிசுபாலன் போன்றார்க்கும். நற்கதி கிடைத்த தென்பதையும் அறிகின்றோம். பலபல தாழம் சொல்லிப் பழித்தசிசு பாலன் தன்னை அலவலை மைதவிர்த்த அழகன் (4.3:5) (நாழம் . குற்றம்; அலவலைமை - அற்பத்தனத்தை; தவிர்த்த-போக்கின; என்று இந்நிகழ்ச்சியைப் போற்றி மாலிருஞ்சோலை அழகனையும் போற்றியுரைப்பர் ஆழ்வார். இசைவாணர்கள் ஒரு பாட்டைப் பாடி முடிக்கும் பொழுது தங்கள் ஆலாபனத்திற்கேற்ப யாதாவது ஒரு சொல்லைச் சொல்லி முடிக்கும் வழக்கத்தை நாம் அறிவோம். அது பொருளற்ற சொல்லாயிருப்பினும் இருக்கலாம். ஆனால், சிலர் அங்கு இராமா என்ற சொல்லை உணர்ச்சியின்றியே சொல்லி முடிக்கின்றனர். அவர்கட்கும் நன்மை ஏற்படத்தான் செய்கின்றது. இதனாலும் பிள்ளைகட்கு எம்பெருமான் பெயர்களையிட்டு