பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்கின்றார். பிச்சை புகினும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் (4.6:3) என்று அறிவுறுத்துகின்றார். இங்கு வியாக்கியானத்திலுள்ள ஒரு கதை அறியத்தக்கது. ஓர் அந்தணன் தன் மகனுக்கு நாமகரண காலத்தில் ஐசுவரியம் தரவல்லான் ஒருவனுடைய பெயரை இப்பிள்ளைக்கு இட வேண்டும் என்றெண்ணிக் குபேரன் பெயரை இடு என்றதும் ஜளிபிளி என்ற பேரிட்டழைத்து ஜீவிப்பதற் காட்டிலும் நாராயணன் என்ற திருநாமத்தைச் சாத்திப் பிச்சை புக்காகிலும் pவிக்க அமையும் என்றார் ஒர் ஆஸ்திகர்,” (ஜளிபிளி.குபேரன் பெயர்). விஷ்ணு சித்தர் மேலும் உபதேசிக்கின்றார்: மானிடசாதியில் தோன்றிற்றோர் மானிட சாதியை மானிடசாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை வானுடை மாதவா கோவிந்தா' என்றழைத் தக்கால் - கானுடை நாரணன் . தம் அன்னை நரகம்புகாள் (4.6:4)

மானிடசாதி-வினைப் பயனை அநுபவிக்கப் பிறந்த சாதி; மறுமைக்கு.வீடுபேறு அடைகைக்கு; வான். பரமபதம்}

என்பது பாசுரம். சீவான்மா கருமங்களுக்கிணங்க தேவயோதி முதலிய பல யோநிகள்தோறும் பிறக்கக் கடவன்; நல்வினை தீவினையாகிய இரண்டையும் அநுபவிப் பதற்கும், புதிதாகப் பெறுகைக்கு மென்றே மானிட யோதியில் பிறப்பது? இப்படி வினைக்கு வசப்பட்டு மானிட சாதியிற் பிறக்கும் பிராணியை இம்மைப் பயனை விரும்பி வினைவயத்ததான மானிட சாதியின் பெயரிட்டழைப்பின் இவ்வுலகில் சில சிறிய பலன்கள் கிடைக்கினும் மறு உலகப்