பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 விட்டு சித்தன் விரித்த தமிழ் பெயரை நமது பிள்ளைக்கு இட்டால் ஒரு குறையுமின்றிப் பூரணனாயிருப்பான்' என்று நினைத்து அப்பெயரை இடுகின்றவர்களைக் குறித்து ஏளனம் செய்கின்றார். *பிம்பி’ என்பதற்கு இங்கு ஒரு பொருளும் இல்லை. இச் சொல் எப்படிப் பொருளற்றதோ அப்படித்தான் நம்பி’ என்கின்ற சொல்லும் பொருளற்றது என்பது ஆழ்வார் கருத்து. ஆகவேதான், நம்பிக்கு எதிர்த் தட்டாக ஒரு பிம்பியை அருளிச் செய்கின்றார். இங்கனம் வெறுப்புத் தோற்றச் சொல்லுகின்ற இடங்களிலெங்கும் மற்றொரு சொல் பொருளின்றி வழங்கப்பெறுவது உலகியற்கை. ஒருவன் ஒரு கடையில் உப்பு உளதோ?’ என்று கேட்டால் அதற்குக் கடையிலுள்ளவன் வெறுப்புக் கொண்ட காலத்தில் * உப்பும் இல்லை; பப்பும் இல்லை' என்று கூறுவதை நாம் காண்கின்றோமன்றோ? அதுபோலவே இங்கும் நம்பி என்னும் பெயரில் வெறுப்புக் கொண்ட ஆழ்வார் பிம்பி என்ற மற்றொரு பொருளில்லாப் பெயரைக் கூட இணைத்துக் கூறுகின்றார். ஆகவே, செம்பெருங் தாமரைக் கண்ணன் பேரிட் டழைத்தக்கால் நம்பிகான்! நாரணன் தம்மன்னை கரகம்புகாள் (4.6:8) (நம்பிகாள்.(அறிவினால்) குறைவற்றவர்களே.) என்கின்றார். மேலும் கூறுவார் : - ஊத்தைக்குழியில் அமுதம்பாய் வதுபோல், உங்கள் மூத்திரப் பிள்ளையை என்முகில்வண்ணன் பேரிட்டு கோத்துக் குழைத்துக் குணாலமாடித் திரிமினோ நாத்தகு காரணன் தம்மன்னை நரகம்புகாள் (4.6:9)