பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கண்ணோட்டம் - 265 |ஊத்தை . அசுத்தமான: மூத்திரம் - அசுத்தமான; கோத்துக் குழைத்து-கூடிக் கலந்து; குணாலக் கூத்து-தலைகீழாக ஆடும் கூத்து.1 - எம்பெருமானுடைய உயர்ந்த திருநாமத்தைக் கேவலமான மானிட மக்களுக்கிடுவது, அசுத்தமாகிய ஓர் எச்சிற்குழியில் அழுதத்தைப் பாய்ச்சுவதை ஒக்கும் என்கின்றார். ஊத்தைக் குழியில் அமுதம் பாய்ந்தால் அமுதமும் அகத்த மாகித் து ய் ப் ப த ற் கு அருகதையற்றுப் போகும். எம்பெருமானுடைய திருதாமமோ தனக்கு யாதொரு கேடும் இல்லாதபடி தான் புகுந்தவிடத்தையும் பரிசுத்த மாக்கி விடும் என்று திருநாமத்தின் மகிமையை எடுத்துக் காட்டுகின்றார் ஆழ்வார். இங்ங்னம் பலபடியாகப் பிள்ளை கட்கு எம்பெருமான் திருநாமங்களை இடும் இன்றியமை யாமையை விளக்குவர் விஷ்ணுசித்தர். w எம்பெருமான் பேரருள் சுரத்தல் நினைத்துப் பார்க்க முடியாதது. பிள்ளையுலக ஆசிரியர் கூறுமாப் போலே, * என் ஊரைச் சொன்னாய்; என் பெயரைச் சொன்னாய்; என் அடியாரை நோக்கினாய்; அவர்கள் விடாயைத் திர்த்தாய்; அவர்கட்கு நிழலைக் கொடுத்தாய்’ என்று ஏறிட்டுக் கொண்டு மடிமாங்காய் இட்டு மக்கள் மீது கருணை சுரப்பான். ஆகவே, எம்பெருமான் பெயர்களாகிய கேசவன், நாராயணன், வாசுதேவன் போன்றவற்றையும் அவன் உகந்த ஊர்களாகிய சீரங்கம், திருமலை, திருவேங் கடம், கடிகாசலம் போன்ற பெயர்களையும் தம் பிள்ளை கட்கு இட்டு உய்யுமாறு அறிவு கொளுத்துகின்றார் விஷ்ணுவையே தம் சித்தத்தில் வைத்திருக்கும் ஆழ்வார். அகத்தினை மரபுகள் : உலகியல் வழக்காகவும் நாடக வழக்காகவும் சித்திரிக்கப்பெறும் சங்ககால இலக்கிய

  • மாங்காய் எடாமலே வாளா வழி போகின்றவன் மடியிலே மாங்காயை மறைத்துக் கொண்டு சென்று மோங்காயைக் களவு கண்டாய்' என்று கூறுதல்,