பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கண்ணோட்டம் 26? திருவுந்தியாரில் (பாடல்-11) வரும் கொங்கை குலுங்க. நின்று உந்தீ பற’ என்ற தொடரால் இவ்விளையாட்டு கொங்கை குலுங்க நின்று ஆடப்படுவதென்று தெரிகின்றது. சோபன மடித்தல், கும்.மியடித்தல் போன்ற ஒருவகை விளையாட்டு எனக் கொள்ளத் தோன்றுகின்றது. இவ்விளையாட்டை ஆடும் ம்களிர் பறவை போல் நிலத்தில் இருந்து பாதங்கள் மட்டும் படிய, இரு கைகளை யும் முடக்கியிருந்து, பின் விரைந்தெழுந்து, இரு கைகளை யும் இரு பக்கங்களில் சிறகுபோல் நீட்டிப் பறவைகள் பறப்பது போலப் பாவனை செய்து ஒடி வேறோர் இடத்தில் முன் போல் அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடப்படும் என்று கொள்ளல் பொருந்தும். ஏனைய விளையாட்டுப் பாடல்கள்போல இவ்விளையாட்டுப் பாடலும் உந்திப் பாட்டு எனக் கொள்ளல் பொருந்தும். இவ்விளையாட்டை இன்னொரு விதமாகவும் கொள்ளலாம். இவ்விளையாட்டில் பறந்து சென்று தொடுகின்றவள் இறைவன் புகழைப் பாட, தொட இருக்கின்றவள் அதன் விளைவைக் கூறுவதாக ஒவ்வொரு பாட்டும் முடிந்துள்ளது. - பெரியாழ்வார் திருமொழியில் ஆழ்வார் இரண்டு ஆயமங்கையரின் நிலையை எய்தி ஒருத்தி கண்ணபிரானின் குணச்சிறப்புகளையும் மற்றொருத்தி இராமபிரானுடைய குணச்சிறப்புகளையும் பாடி உந்தி பறத்தல் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்தகற் பொய்கைபுக்கு - அஞ்சனப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்து அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற (3.9:5). (கைசெய்து. அணிவகுத்து; பொய்கை-மடு, பணம் , படம்) இது கிருஷ்ணாவதாரப் பற்றுடைய ஒருத்தியின் பாசுரம்.