பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 விட்டு சித்தன் விரித்த தமிழ் முடிஒன்றி மூவுல கங்களும் ஆண்டுஉன் அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த படியில் குணத்து பரதநம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (3.9:6). (முடி-திருமுடி; ஒன்றி-குடி, படி இல்-ஒப்பற்ற; அடி. நிலை.பாதுகை; இஃது இராமாவதாரப் பற்றுடைய மற்றொருத்தியின் பாசுரம், இப்படிப் பாசுரங்கள் மாறி மாறி வருகின்றன இத்திருமொழியில், - தாலாட்டுப் பாடல்கள்: குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பாட்டுப்பாடித் தாலாட்டி உறங்க வைப்பது தாய் மாருக்கு இன்பமயமான செயலாகும். அப்போது பாடும் தாலாட்டுப் பாட்டு தொன்று தொட்டுக் குடும்பங்களில் வீட்டுப் பெண்களின் கலையாக இருந்து வருகின்றது. தமிழ் இலக்கியத்தில் மிகப்பழைய தாலாட்டுப் பாட்டாகக் கிடப்பவை, பெரியாழ்வாரின் மாணிக்கம் கட்டி (1.3:1) என்ற பெரியாழ்வார் திருமொழியின் பத்துப் பாசுரங்களும் குலசேகராழ்வாரின் மன்னுடிகழ் கெளசலைதன் (பெருமாள் திருமொழி.8)என்ற பெருமாள் திருமொழிப் பத்துப் பாசுரங் களும் ஆகும், இங்குப் பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பாசுரத்தை மட்டிலும் காட்டுவேன். யசோதைப்பிராட்டி யானவள் தன்னுடைய வளர்ப்புப் பிள்ளையாகிய கண்ண பிரானைத் தொட்டிவில் கண்வளரச் செய்து தாலாட்டின படியை அவளைப் போலவே ஆழ்வார் தாமும் அநுபவித்துப் பேசும் திருமொழி இது. ஒரு பாசுரம்: மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே! தாலேலோ! வையம் அளந்தானே தாலேலோ (1.4:1).