பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக் கண்ணோட்டம் 269: (கட்டி.இருபக்கத்தில் கட்டியும்; இடை-நடுவில்; ஆணிப் பொன்.மாற்றுயர்ந்த பொன்; வண்ணம்.அழகிய; பேணி . விரும்பி; விடுதந்தான். அனுப்பினான்; மாணி.பிரமச்சாரி, வையம். உலகம்) என்பது. அடுத்து வரும் பாசுரங்களில் முறையே சிவன் மாதளம்பூக் கோவையென்கின்ற அரைவடத்தையும் (2), தேவேந்திரன் அரைச்சதங்கையையும் (3), தேவதைகள் பலர் கூடிப் பல திருவாபரணங்களையும் (4), குபேரன் ஐம்படைத்தாலியையும் (5), வருணன் முத்துகளாலும் பவழங்களாலும் தொடுக்கப்பட்ட மாலைகளையும் (6). கொண்டு வந்துள்ளனர். பெரிய பிராட்டியார் திருத். துழாய் மாலையும் (7), பூமிப் பிராட்டியார் கச்சுப்பட்டை பொன்னாற் செய்த உடை வாள் கரைகட்டிய சே.ைல, தங்க மயமான தோள் வளைகளையும், இரத்தினம் இழைத்த வயிரச்சுட்டியையும் அழகிய பொற்பூ ஆகிய வற்றையும் (8) அனுப்பியுள்ளனர். துர்க்காதேவி கஸ்துரி, கர்ப்பூரம், சந்தனம் முதலிய மணப்பொடிகளையும், மஞ்சள் பொடி, கண் மை, சிந்துாரம் முதலியவற்றையும் கொண்டு வந்துள்ளாள் (9). நாட்டுப்புற இலக்கியக். கூறுகள் பக்தி இலக்கியங்களில் கலந்து வரும்போது பக்தி இலக்கியங்கள் புதுப்பொலிவையும் புதுவேகத்தையும் பெற்று இலங்குவதைக் காணலாம். இங்ங்ணம் இந்த ஆழ்வார் பாசுரங்களில் சமுதாயக். கண்ணோட்டத்தைக் காண முடிகின்றது.