பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பாசுரங்களில் படிமங்கள் "படிமம் (imagery) என்பது சொற்களால் கவிஞன் புலன்கட்குக் கவர்ச்சியுடையதாகச் செய்யும் ஒருவகை உத்தி யாகும், புலன்களின்மூலம் படிப்போரின் எழுச்சிகளையும் அறிவினையும் கிளர்ந்தெழச் செய்தல் இயலும்; இதனைக் கருதியே கவிதையில் படிமம் கையாளப் பெறுகின்றது: என்று கூறுவர் பர்ட்டன் என்ற ஆங்கிலத் திறனாய்வாளர் கவிதைத் திறனாய்வு என்ற தமது நூலில். மேலும் அவர் கூறுவார் : புலன்கட்கு முறையீடு செய்வதற்கேற்பப் படி மங்கள் வகை செய்யப்பெறுகின்றன; கட்புலப்படிமங்கள், செவிப்புலப் படிமங்கள், சுவைப்புலப் படிமங்கள், நாற்றப் புலப் படிமங்கள், நொப்புலப் படிமங்கள், இயக்கப்புலப் படிமங்கள், மரபுவழிப் படிமங்கள் என்பவை இவை யாகும் என்று. எண்ணத்திற்கும் புலன் காட்சிக்கும் குறியீடு களாக இருப்பவை சொற்களாகும் என்பதை நாம் அறிவோம். ஒரு கவிதையைப் படிக்கும்போது சொற்கள் அல்லது சொற்கோவைகள் சிலபல படிமங்களை நம் மனக் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. புலன்களின் மட்டத்தில் தூண்டல்கள் (Stimuli) செய்வதைப் போலவே, படிமங்களும் கருத்துநிலைச் செயலில் (Ideational level) நம் புலன்களைத் துTண்டி நம்மிடம் கவிதையதுபவத்தை எழுப்பிக் கவிதையைத் துய்த்து மகிழ்வதற்குத் துணையாக அமைகின்றன. மேலும் சில சொற்கள் கட்டுண்ட படிமங் களையும் (Tied images), விடுதலை"ப் படிமங்களையும் (Free images) எழுப்பிவிடுகின்றன. இவையும் கவிதையை