பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் படிமங்கள் 27} நுகர்வதற்கு இன்றியமையாத கூறுகளாகவே(Sine qua non) அமைகின்றன. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியிலுள்ள பாசுரங்களில் இத்தகைய படிமங்கள் அமைந்திருப்பதால் ப ா சு ரங்களைப் பயில்வோரின் மனத்தில், இவை தோன்றிக் கவிதையதுபவத்தைக் கிளர்ந் தெழச் செய்கின்றன; படிப்போரைப் பக்திக் கொடுமுடிக்கு இட்டுச் செல்கின்றன. சீதக்கடலுள் அ. மு. த ன் ன தேவகி (1.3:1), மைத் தடங்கண்ணி யசோதை" (1.2:12), "மாணிக்குறளன் (1.3:11, வெள்ளிப் பருமலைக் குட்டன்: (1.7:5), கைந்நாகத்து இடர்கடிந்த கனல் ஆழிப்படை யுடையான் (4.9:11) என்பன போன்ற சொற்கோவை எழுப்பும் படிமங்களை எண்ணி மகிழலாம். இனி, சிறப்பாக ஒவ்வொரு புலனையும், பொதுவாகப் பல புலன் களையும் கவரும் படிமங்களைக் கண்டு மகிழ்வோம். - கட்புலப் படிமங்கள் (Visual images): பல்வேறு படிமங் களிடையேயும் கட்புலத்தைக் கவரும் உருக்காட்சிகளே அதிகமாக உள்ளன. இவையே படிப்போரின் மனத்தில் நிலையான பதிவினை விளைவிக்கின்றன. கட்புல நரம்பு ஏனைய புலநரம்புகளைவிடத் தடித்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கருதலாம். இதன் காரணமாகவே இக் காலக் கல்வியில் கட்புல.செவிப்புலத் துணைக் கருவிகள் அதிகமாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. பள்ளிகளில் சுற்றுலா அமைத்து மாணாக்கர்களைப் பல்வேறு இடங் கட்கு இட்டுச் சென்று பல்வேறு காட்சிகளை நேரில் காணச் செய்கின்றனர். விட்டு சித்தன் பாசுரங்களில் கட்புலனைக் கவரும் ஒரு சில படிமங்களைக் கண்டு மகிழலாம். மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய் பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்