பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 விட்டு சித்தன் விரித்த தமிழ் மின்னிற் பொலிந்ததோர் கார்முகில் போலக் கழுத்தினில் காறையொடும் தன்னிற் பொலிந்த இருடீ - கேசன் தளர்நடை நடவானோ (1.8:3) |மின்கொடி.கொடிமின்னல்; பரிவேடம்-சந்திரனைச் சுட்டிச் சில காலங்களில் காணப்படும் ரேகை. (ஊர் கோள்); பீதகம்.பொன்) மின்னுக்கொடி, வெண்திங்கள், பின்னல், அரசு இலை, பீதகச் சிறு ஆடை, கார்முகில், காறை.இவை யாவும்: கட்புலப் படிமங்கள். கதிரா யிரமிரவி கலந்தெறித் தால் ஒத்த நீள் முடியன் (4.1:1) இதில் கதிர், இரவி, நீள் முடியன் இவை கட்புலப் படி மங்கள். வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த்திருச் சக்கரம் ஏந்து கையன் (4.1:7) இதில் வெள்ளை விளிசங்கு, வெஞ்சுடர்த் திருச்சக்கரம், ஏந்து கையன்-இவை கட்புலப் படிமங்கள். எறிப்புடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுத்தாற்போல் அரவ னையின்வாய் சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமனிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே (4.9:7) இதில் மணிவரை, இளஞாயிறு, பணங்கள், செழுமரிைகள், திருவரங்கம்-இவை கட்புலப் படிமங்கள். செவிப்புலப் படிமங்கள் (Auditory images): காதினால், மட்டிலும் கேட்டு உள்ளத்தைப் பறிகொடுக்கச் செய்யும் படிமங்கள் இவை. விட்டுசித்தன் பாசுரங்களில் இத்தகைய, படிமங்களைக் கண்டு மகிழலாம்.