பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼莒 விட்டு சித்தன் விரித்த தமிழ் பாசுரம், வாரணம் பைய ஊர்தல், தளர்நடை நடத்தல், மும்மதப் புனல் சோர்தல் இவை இயக்கப் படிமங்கள். இரும்புச் சங்கிலி சலார்பிலார்’ என ஒலித்தல், துரங்கு பொன்மணி ஒலித்தல், கிண்கிணி ஆரவாரித்தல், உடை மணி பறைபோல் ஒலித்தல் ஆகியவை செவிப்புலப் படி மங்களாகும். இக்கலவைப் படிமம் கண்ணனின் தளர் நடையை நேர் காட்சியாகக் காட்டுகின்றது. - சுவைப் புலப் படிமங்கள் (Gustatory images): நாவினால் பெறும் அநுபவத்தைத் தரும் பாசுரங்கள் அதிகமாகவே காணப்பெறுகின்றன. இறைவனே ஆரா அமுதனாக' இருக்கும்போது அவனைப் பற்றிய பாசுரங்களில் இத் தகைய படிமங்கள் இருப்பதில் வியப்பில்லை. விஷ்ணுசித்தர் டிசோதைப் பிராட்டியின் நிலையிலிருந்து கொண்டு பிள்ளைப் பெருமாளைக் குழல் வாரிக்கொள்ள அழைக் கின்றார். அப்போது பேசும் பாசுரம் இது: * - திண்ணக் கலத்துத் திரையுறிமேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் (2.5:3) - - |திண்ணக்கலம்.கெட்டியான பாத்திரம்; திரை உறி. பின்னுதலையுடைய உறி; விரைய-விரைவாக) இதில் வெண்ணெய் விழுங்குதல் சுவைப் புலப் படிமம். பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை (1.3:5) இதில் முலை சுவைத்து உண்ணல் சுவைப் புலப் படிமம். என்சிறுக் குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான். (1.5:2) இதில் எனக்கோர் இன்னமுது என்பது சுவைப்புலப் படிமம். - - - -