பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் படிமங்கள் 277 fபாய்ந்திட்டு-குதித்து; நீள் முடி.நீண்ட படம்; மீன. இளைத்துச் சரண்புகுந்த பிறகு; என்ற பாசுரத்தில் மீண்டும் குறிப்பிடுவதைக் காணலாம். பொய்கை கலங்கல், பாய்ந்திடல், நீள்முடியில் நடனம் செய்தல் இவை இயக்கப்புலப் படிமங்களாகும். கண்ணன் பிருந்தாவனத்தில் குழலூதிய செயலைக் காட்டுகின்றார் பெரியாழ்வார். ஊதிய திறத்தை, சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறக் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்கச் குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக் - கோவிந்தன் குழல்கொ திேன போது (3.8:8) fபரிமாற-பரவ; கோடவளைய; கொப்பளிக்க குமிழ்க்க; கூடவிப்ப.கிளர்ந்து வளைய.: என்ற பாசுரப்பகுதி காட்டுகின்றது. கண்ணன் குழல் ஊதுவதை நேரில் காண்பது போன்ற நிலையை உண்டாக்கு கின்றது. பாசுரம். கண்ணனின் சிறுவிரல்கள் புல்லாங்குழலின் துளைகள் தோறும் தடவுதல், கண்கள் வளைந்து காட்டுதல், வாய் குமிழ்த்தல், புருவம் கிளர்ந்து வளைதல் இவை சிறு சிறு இயக்கங்களைக் காட்டும் இயக்கப் புலப் படிமங்களாகும். அற்புதமான புல்லாங்குழல் ஓசையைக் கேட்டவர்கள், கேட்டவைகள் இவர்களிடம் உண்டான விளைவையும் காட்டுகின்றன பாசுரங்கள். பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச்செவியாட்டகில் லாவே (3.618)