பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 விட்டு சித்தன் விரித்த தமிழ் இகணம்-கூட்டம்; துறந்து-விட்டொழித்து: படுகாடுவெட்டி வீழ்ந்த காடுபோல கிடப்ப-மெய் மறந்து கிடக்க; கவிழ்ந்து.தொங்க விட்டுக் கொண்டு; ஆட்டகில்லாய அசைக்க மாட்டா) இதில் பறவைகள் கூடு துறத்தல், அவை சூழ்தல், படுகாடு கிடத்தல் இவையும் கறவை மாடுகள் கால் பரப்பிடுதல், கவிழ்ந்து இறங்குதல், செவியாட்டா திருத்தல் இவையும் இயக்கப் புலப் படிமங்களாகும். - மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய்வழி சோர இரண்டு பாடும் துலுங்கா புடைபெயரா - எழுது சித் திரங்கள் போல கின்றனவே (3.6:9) சோர-நழுவிவிழ்; பாடு.பக்கம்; துலுங்கா. அசையாம்ல்; புடைபெயரா-அடியைப் பெயர்த்து இடமாட்டாமல்.) இதில் மேய்ந்த புல் கடைவாய் வழி சோர்தல் இயக்கப்புலப் படிமங்களாகும். மரங்கள் கின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும்; வளர்கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கிஅவை செய்யும் குணமே (3.6:7) |பாயும்.பெருக்கும்; வீழும்-விழா நிற்கும்; தாழும். தாழா நிற்கும்; இரங்கும்.உருகும்; கூம்பும். குவியும்.) - - இதிலும் மதுதாரை பாய்தல், மலர்கள் வீழ்தல், கொம்புகள் தாழ்தல் போன்றவை இயக்கப்புலப் படிமங்கள் ஆகும். படிமங்களின் கலவை: பெரும்பாலும் படிமங்கள் தனித்து வருதல் அருமை; அவை கலவையாகவே பாசுரங் களில் அமைந்து அவற்றிற்கு மெருகூட்டுகின்றன. மேலே