பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

хxix சந்திக்கும்போதெல்லாம் அன்புடன் நன்கு உள்ளீர் களா? (தெலுங்கில் பாஹ-ன்னரா?”) என்று கேட்கும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும். புன்முறுவல் பூத்தமுகம், கலையுணர்வுடன் நெற்றியில் தீட்டப்பெற்ற திருமண்காப்பு, அமைதியாகப் பேசும் இனிய பேச்சு இவற்றில் சொக்கியநிலை இன்றும் என் உள்ளத்தில் பசுமையாகவே உள்ளது. பார்க்கும்போதெல்லாம் என் மனத்தில் இடம் பெற்றிருக்கும் விட்டுசித்தன் போல் காட்சி தருவார். இப்பெரியாரின் பால் யான் கொண்டுள்ள பெருமைக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக, விட்டுசித்தன் விரித்த தமிழ் என்ற இந்நூலை அன்புப் படையலாக்கும் பேறு பெறுகின்றேன். இந்த மகாப் பிரசாதத்தைசென்னை வைணவ மகாசங்க மாநாட்டில் (டிசம்பர். 1987) 100 படிகளை பாகவதர்கட்கு வழங்கி அவர்கள் ஆசியையும் பெறுகின்றேன். இந்தப் பெரியார்களின் ஆசியால் இந்நூல் தமிழ் மக்களிடம் செல்வாக்குடன் திகழ்ந்து வைணவ உணர்ச்சியை வளர்க்கும் என்ற திடமான நம்பிக்கை என்றும் என்பால் உண்டு. இவையெல்லாம் எம்பெருமான் திருவருள் என்பது என் அதிராத நம்பிக்கை. இந்நூலை யான் எழுதி வெளியிட என் இதயத்தாமரை யில் அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும் திண்வரைசூழ் திருவேங்கடமாமலை என் அப்பனை மனம் மொழி. மெய்களால் வணங்கி வாழ்த்தி அடிமையாகின்றேன். வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக் கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர்-வீடாக்கும் மெய்ப்பொருள்தான் வேத முதற்பொருள்தான் விண்ணவர்க்கு கற்பொருள்தான் நாராயணன். --திருமழிசை யாழ்வார் வேங்கடம்" AD-13 (பிளாட் 3354) ) ந. சுப்புரெட்டியார் அண்ணாநகா தொ. பே : 615583 சென்னை-600 040 7–5-1987 8. நான்முகன், திருவந், 13