பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 விட்டு சித்தன் விரித்த தமிழ் மங்கள். இவை கலந்த கலவைப் படிமம்மதில் அரங்கத்தை நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. பாட்டின்பம் - பக்தி அநுபவம்: இந்தப் படிமங்களின் செயல்களைச் சிந்திப்போம். நம் உடல் தூண்டல்-துலங்கல் (Stimulus-Response) என்ற உளவியல் தத்துவப்படி இயங்கு கின்றது. உள்ளமும் அதற்கேற்பத் துலங்குகின்றது வெளி உலகிலிருந்து துரண்டல்கள் புலன்களைத் தாக்கும்போது (Sensory ieve!) அவற்றிற்கேற்பத் துலங்குகின்றன. அதாவது, அப்புலன்கள் அத்துண்டல்களால் கிளர்ச்சி அடைகின்றன. அதனால் ஏற்படும் உணர்ச்சியை மனம் அநுபவிக்கின்றது. இந்த உணர்ச்சிப் பெருக்கில் உண்டாகும் இன்பமே-முருகுணர்ச்சியே-சந்தர்ப்பத்திற்கேற்ப ஒன்பது சுவைகளாகப் பரிணமிக்கின்றன. எடுத்துக்காட்டாக, மணப்பொருள்கள் தரும் மனத்தை நாற்றப் புல நரம்புகள் வாங்கி மூளைக்கு அனுப்புகின்றன. மனம் அப்பொருள்கள் நல்கும் மணத்தைத் துய்க்கின்றது. ஊதுவத்தியில் மணம் செயல்படுவதைக் கருதுக: திருவேங்கடவனின் சேவைக்காக நாம் கருவறைக்குள் புகுங்கால். நாம் அநுபவிக்கும் மணத்தை எண்ணுக. இங்ங்ணமே பிற புலன்களின் மூலம் பெறும் துரண்டல்களால் மனம் அந்தந்தப் பொருள்கள் தரும் சுவை களைப் பெற்று அவற்றில் ஈடுபடுகின்றது. இவ்வாறு வெளியுலகத் துண்டல்களால் அடிக்கடி மனம் பெறும் அநுபவம் பெருமூளையில் (Cereberum) பதிவாகி விடுகின்றது. உலகை இன்ப மயமாகக் கண்டு உள்ளத்தில் பூரிப்பு அடைபவர்கள் கவிஞர்கள். ஆழ்வார்கள் போன்ற ஞானச் செல்வர்கள் உள்ளத்தில் கனிவு அடைந்தவர் களாதலின் அவர்கள் இயற்கையில் இறைவனையே காணும் பேறு பெற்றவர்களாகின்றனர். - இவ்வாறு பெருமூளையில் பதிவாகியிருக்கும் அதுபவம் அச்சு வடிவிலுள்ள கவிதைகளைப் படிக்கும்போது நினைவாற்றலின் காரணமாகத் தூண்டல்களாக (Ideational,