பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் படிமங்கள் 23? leval) மாறுகின்றன. இவை மூளையிலுள்ள பூத்தண்டு {Thalamus)» Ġlbjögääsöy® (Hypo-thalamus) greir,D LIø& களின் மூலமாகப் புலன்களை அடையும்போது மூளையின் அற்புதமாக அமைந்திருக்கும் நரம்பு அமைப்புகளைத் தூண்ட, அந்நரம்புகளின் இயக்கத்தால் மாங்காய்ச் சுரப்பிகள் (Adrenal glands) போன்ற நாளமில்லாச் சுரப்பி களில் (Dctless glands) சாறுகளைச் சுரக்கச் செய்து குருதியோட்டத்தை மிகுவிக்கின்றன. உடலும் கிளர்ச்சி அடைகின்றது. அப்போது கவிதைகளில் வரும் படிமங் களைப் புலன்கள் மீண்டும் மனத்தில் தோன்றச் செப் கின்றன. மனம் அக்காட்சிகளை அநுபவித்து மகிழ் கின்றது. இத்தகைய முருகுணர்ச்சி ஆழ்வார் பாசுரங்களில் பக்தியுணர்ச்சியாகப் பரிணமிக்கின்றது. இந்தப் பாசுரங் களைப் பயிலுங்கால் அதே உணர்ச்சியை நாம் பயிற்சியால் பெற முடிகின்றது. ஆழ்வார்கள் அநுபவித்த பக்திஉணர்ச்சி அவர்தம் பாசுரங்களில் தேக்கி வைக்கப் பெற்றுள்ளது. இப்பாசுரங்களை நாம் பயிலுங்கால் அவற்றிலுள்ள சுவைகளை-பக்தி உணர்வுகளை-நம் மனம் அநுபவித்து மகிழ்கின்றது. பாசுரங்களும் மம்மர் அறுக்கும் மருந்தாக நம்க்குக் களிப்பூட்ட, நாம் பிரம்மாதுபவம் பெற்ற நிலையை அடைகின்றோம்.