பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிறப்பும் திருத்தொண்டும் தென் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் (இப்போது காமராசர் மாவட்டம்) பூரீவில்லிப்புத்துார் என்ற ஊர் வரலாற்றுச் சிறப்பும் புராணச் சிறப்பும் மிக்கது. இவ்வூருக்கு இருப்பூர்தி நிலையம் உள்ளது. இருப்பூர்தியில் செல்ல விரும்புவோர் மதுரையிலிருந்து சென்றடையலாம். தவிர, மதுரையிலிருந்து இந்த ஊருக்கு அடிக்கடிப் பேருந்து வசதியும் உண்டு, பேருந்தில் செல்வோர் இவ்வூரை விரைவில் சென்றடையலாம். இவ்வூருக்கு நான்கு பக்கங் களிலிருந்தும் சாலை வசதிகளும் பேருந்து வசதிகளும் நன்முறையில் ஏற்படுத்தப் பெற்றுள்ளன. வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் இதுவும் ஒன்று. பெரியாழ்வாரும் ஆண்டாளும் இத்திவ்விய தேசத்தை மங்களாசாசன்ம் செய்துள்ளனர். இந்த இருவரும் பிறந்த ஊர் துரீவில்லிப் புத்துரே. - - இந்த ஊருக்கு வில்லிப்புத்துTர் என்று பெயர் வரக் காரணம் என்ன? நம் சிந்தனை புராண நோக்கில் செல்லு கின்றது. இரணியாட்சன் என்பவன் ஓர் அசுரன். இவன் பூமிக்குப் பெரும் பாரமாய் இருந்துகொண்டு சாது சனங் களை நலிந்து வந்தான். அவர்கட்கு எத்தனையோ கொடுமைகள்ையும் திச்செயல்களையும் புரிந்து வந்தான். இப்படிப்பட்ட கொடிய அசுர்னை எம்பெருமான் வராக வடிவங்கொண்டு வதைத்தான் என்பது புராண் வரலாறு. இந்தத் தலந்தான் வராக rேத்திரம் என்று வடமொழிப் வி-1