பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 விட்டு சித்தன் விரித்த தமிழ் பெயரால் வழங்கப்பெறுவதாக வில்லிப்புத்துார்த் தல புராணம் விரித்துரைக்கின்றது. மல்லி நாடு: வில்லிப்புத்தூர்ப் பகுதி ஒரு காலத்தில் செண்பகக் காடாக மண்டிக் கிடந்தது. இப்பகுதியை மல்லி என்ற வேடப்பெண்ணரசி ஒருத்தி ஆண்டுவந்தாள். எனவே, வராக க்ஷேத்திரம் மல்லி நாடு என்ற மற்றொரு பெயராலும் வழங்கி வந்தது. இறைவனது சாபத்தால் இரண்டு முனிவர்கள் அவளுக்கு இரண்டு புதல்வர்களாகத் தோன்றுகின்றனர். இவர்களுள் மூத்தவன் பெயர் வில்லி, இளையவன் பெயர் கண்டன். ஒரு நாள் இளையவன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு புவியால் கொல்லப் படுகின்றான். இதனால் மனம் உடைந்து வாழ்ந்த வில்லியின் கனவில் பாற்கடல் பரந்தாமன் தோன்றி க.அன்பனே, நீ இந்தக் காட்டை அழித்து இதனை ஒரு நகர மாகச் செய்வாயாக; பாண்டி, சோழ நாடுகளிலுள்ள அந்தணர்களைக் குடியேற்றுக’ என்று சொல்லுகின்றான். அதன்படி வில்லி காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்ட" நகரமே வில்லிப்புத்துார். வில்லியால் நிறுவப் பெற்றதால் ஊர் வில்லிப்புத்துர் என்ற பெயர் ஏற்படுகின்றது. மல்லி நாட்டிலுள்ள வடவேச்வரபுரம் என்ற பழைய நகரத்தை வில்லி புதுப்பித்ததால் அந்நகரத்திற்கு வில்லிப்புத்துனர்' என்ற பெயர் வந்தது என்றும் சொல்லுகின்றனர். இந்த ஊர் இந்தப் பெயராலும் சுருக்கமாக புத்துார் என்றும் புதுவை என்றும் வேறு பெயர்களாலும் வழங்குவதைப் பெரியாழ்வார், ஆண்டாள் திருமொழிகளில் அறியலாம், இந்தப் புதுவை நகரில் வேயர் குலத்தில் முகுந்தப் பட்டர் என்ற வைதிக அந்தணர் ஒருவர்; அவர்தம் இல்லக் 1. பெரியாழ். திரு. 1.4 : 10; 3.5:11, 2. டிெ. 1.2 : 21; 1.5 : 1.1. நாச். திரு. 1.10; 5 ; 10. 3. வேயர்-பார்ப்பனர் குலத்தில் ஒரு பிரிவினர்.