பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 விட்டு சித்தன் விரித்த தமிழ் மகிழ்வார். பூமாலையைக் கட்டுவது போல் பாமாலை கட்டுவதிலும் இவரது அவா எல்லை கடந்து நிற்கின்றது. எம்பெருமானுக்குக் கொஞ்சும்தமிழால் பிள்ளைத் தமிழ் பாடித் தந்த பெருமையை இவரிடம் காண முடிகின்றது. இதனைப் பின்னர் காண்போம். கண்ணனைப் பச்சைப் பசும் குழவிப் பருவத்திலிருந்து உருவகப்படுத்தி உலகிற்கு விட்ட பெருமை இப்பெரியாருக்கே உரியது என்று கூறின் அது மிகையன்று. ... - கந்தவன கைங்கரியம்: நந்தவனத்தை நன்கு கவனித்து அங்குக் கிடைக்கும் துளசி இலைகளையும் மலர்களையும் கொய்து அவற்றைக் கொண்டு பலவிதமான பூமாலை களைக் கட்டுவார். அவற்றை அவ்வூரில் எழுந்தருளி யிருக்கும் வடபத்திரசாயிக்குச் (ஆலிலைப் பள்ளியானுக்குச்} சாத்தி மகிழ்வார். இதுவே அவருக்கு அன்றாட கைங்கரிய மாக இருந்து வருகின்றது. இவருக்கு தந்தவன கைங்கரி யமும் மலர்த்தொண்டும் ஆனந்தமாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இவர் இறையன் பில் ஊறித் திளைத்திருப்பாள். உளங்கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்தில் ஊறுந்தேன் அல்லவா எம்பெருமான்? அடிக்கடி இவர் சிந்தனையில் ஒடுவது: எம்பெருமானே, இவ்வுலகிலுள்ள ஒவ்வோர் ஆன்மாவும் உனக்கு அர்ப்பண மாக வேண்டிய ஒரு மலர்தானே! உன்னுடைய வாடாத மாலையில் பொலிவு பெற்றுத் திகழவேண்டிய மல ரல்லவா? ஐயோ, எத்தனை மலர்கள் வெயிலில் உவர்ந்து போகின்றன! பணியிலே கருகிப் போகின்றன! மழையிலே அடிபட்டுப் போகின்றன! இந்த மலர்கள் எல்லாம் உன் னுடைய மனமாலையை அலங்கரிக்கும் நாள் எந்நாளோ?" என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே இவர் கைங் கரியம் செய்து கொண்டிருப்பார்: பூக்கொய்து மாலை கட்டிக் கொண்டிருப்பார். இந்த எண்ணங்களில் சில பாட் டாகப் பரிணமித்துப் பாமாலையாகி விடுவதும் உண்டு. 5. பெரி. திரு, 4.3 : 9