பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் திருத்தொண்டும் 5 ஒரு பகற் கனவு : விஷ்ணு சித்தருக்குக் கண்ணன்மீது ஈடுபாடு அதிகம். கண்ணன்மீது பக்தி செலுத்திக்கொண்டே இவருள்ளம் எத்தனையோ பகற்கணவுகளில் ஆழ்ந்து கிடக்கும். இத்தகைய கனவுகளில் இவர்தம் உள்ளத்தையே ஒரு பெண்ணாகக் க ற் ப ைன செய்துகொள்வார். இத்தகைய உள்ளத்தில் உள் மனம் பாரமார்த்திகப் பொருள்களில் மூழ்கிப்போய் ஈசுவரனுடைய காதலி என்று தன்னை நினைத்துக்கொள்ளும். உலகப் பற்றில் ஈடுபட்டுக் கிடக்கும் புறமனமோ தாயாக அமைந்து உள்மனத்தைத் (அக மனத்தைத்) தன் அருமை மகளாகக் கருதி அதற்கு அறிவுரை கூறத் தொடங்கும். . இந்த நிலையில் ஒரு சமயம் ஏதோ ஒரு நாடகம் நிகழ்வதுபோல் இவருக்குச் சில பக்தியநுபவங்கள் ஏற்படு கின்றன. தன் மகளின் காதலைக் கண்டு தாய் திடுக்கிடு கின்றாள். இளம் பெண்ணானாலும் இவள் எனக்குக் குழந்தைதானே!" என நினைக்கின்றாள். ஏ. பெண்டிர் காள்! நீங்கள் எல்லாம் உங்கள் தாய்மாருக்கு அடங்கிப் போவதில்லையா?" என்று மற்ற இளம்பெண்களை நோக்கி வினவுகின்றாள். அன்னை இப்படிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்க, அருமை மகளுக்கோ தன் காதலனைப் பற்றிய கவலையே பெரிதாக அமைகின்றது. இல்லத்தைச் சிறைச்சாலையாகவே நினைத்திருக்கின்றாள். எனவே, எப்படியும் சுகமாக இருந்தால் சரி. காதலனிடம் சேர்க்கப் பாருங்கள் என்று வாய்விட்டுச் செப்புகின்றாள் அன்னை. - இந்தக் கனவு நாடகத்தில் இறுதியாக ஓர் காட்சி. அழகான ஒரு தடாகம். செந்தாமரை மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. ஒரு நாள் அந்த மலர்களின்மீது பணி சொரிய, இதழும் மகரந்தமும் உதிர்கின்றன. ஆ என்ன தண்மை! என்ன மலர்ச்சி! ன்ைன சிவப்பு! என்ன நறுமணம்!" என்று கண்டோர் அதிசயிக்கும்படி இருந்த அந்த ஒப்பற்ற