பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ விட்டு சித்தன் விரித்த தமிழ் பொய்கை எப்படியாகிவிட்டது! அப்படி அழகழிந்து வெறித்துப்போயுள்ளது காதலியின் இல்லம். ஏன்? அவளைத்தான் அங்குக் காணவில்லையே! அன்னை மட்டிலுமே தென்படுகின்றாள். காதலனோடு சேர்த்து வைக்காமல் தாமதம் செய்தோமே!" என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றாள். எவ்வளவு அருமையாக வளர்த் தேன்! அவளுடைய அழகு - குண நிறைவினைக் கண்டு, அவற்றைப் பிறர் புகழ்வதையும் கேட்டு, இவளுக்கு அன்னை என்பதால்தானே எனக்குப் பெருமை?’ என்றிருந் தேனே' என்றெல்லாம் பரிதவிக்கின்றது தாயின் இதயம்.

ஐயோ! ஒரே மகன் அல்லவா!' என்று எண்ணாத தெல்லாம் எண்ணி,

ஒருமகள் தன்னை உடையேன்" உலகம் கிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்: செங்கண்மால் தான்கொண்டு போனான்!" திருமகள்-இலக்குமி, செங்கண்மால்.திருமால்) என்று பல படியாக உருகித் திடீரென்று கனவு நிலை (தியான நிலை) கலைந்து விழித்துக் கொள்கின்றார் விஷ்ணு சித்தர். உண்மையில் அன்னை வேறு யாரும் இல்லை; விஷ்ணு சித்தரின் புறமனமே இவ்வாறு பேசு கின்றது. அந்த ஒரே மகள் யார்? பக்திப் பெருங் காதலில் ஆழ்ந்துபோன அவர் உள்மனம் தானா? அல்லது அவர்தம் மகளைக் குறித்தே இப்படி ஒரு சூசகமான கனவு கண்டாரா? இதனைப் பிறிதோர் இடத்தில் விளக்குவேன். மக்கட்பேறு : விஷ்ணு சித்தருக்கு மக்கட்பேறு ஏற்பட வில்லை; அதைப்பற்றி அவர் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை. ஒரு நாள் பூக் கொய்வதற்காக அதிகாலை யில் நந்தவனத்திற்கு வருகின்றார். பச்சைப்பசேலென்று 6. பெரியாழ், திரு. 3.3:4